Rajini - மூத்த மகள் இயக்கத்தில் நடிச்சாச்சு.. அடுத்து இளைய மகள் இயக்கத்தில் நடிக்கிறாரா ரஜினி?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு கெஸ்ட் ரோலில் லால் சலாம் படத்தில் நடித்தார். தற்போது அவர் வேட்டையன் படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தை ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். இப்படி பிஸி லைன் அப் வைத்திருக்கும் ரஜினியின் புதிய படம் பற்றி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

இந்திய சினிமாவின் ஐகான்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். இதுவரை 170 படங்களில் நடித்திருக்கும் அவருக்கு பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களே. இடையில் தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்து ட்ரோல்களையும், விமர்சனத்தையும் பெற்றன. இதனால் அவரும், அவரது ரசிகர்களும் கொஞ்சம் அப்செட் ஆகினர். மேலும் இத்தனை வருடங்களாக ரஜினி வசம் இருந்த சூப்பர் ஸ்டார் நாற்காலி அவரிடமிருந்து சென்றுவிடுவதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் பேச்சுக்கள் எழுந்தன.

Rajini Will Act Under the Soundarya Direction Here are the details

அந்த சீன்லாம் இல்ல: ஆனால் அந்த சீன்லாம் இல்லை என்று ஜெயிலர் படம் உணர்த்தியது. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ரஜினிக்கு ஏற்றபடி சீன்கள், திரைக்கதை என ஒவ்வொரு விஷயத்தையும் நெல்சன் பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார். இதன் காரணமாக படம் மெகா ஹிட்டானது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

வேட்டையன்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே இரண்டு படங்களில் லைகா தயாரிப்பில் கமிட்டானார் ரஜினி. அதன்படி லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் ஏற்று நடித்தார். படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. ஜெயிலரில் பிடித்ததை இதில் விட்டுவிட்டாரே என்று அவரது ரசிகர்கள் ஏக்கமடைந்திருக்கின்றனர். இருந்தாலும் ஞானவேல் இயக்கத்தில் அவர் நடித்துவரும் வேட்டையன் படத்தின் மீது ரஜினி ரசிகர்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

பட்டையை கிளப்புவார்: ஞானவே இயக்கிய முதல் படமான ஜெய் பீம் பெரும் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல் வேட்டையன் படத்திலும் ரஜினிகாந்த்துக்காக இயக்குநர் தரமான சம்பவம் செய்வார் என்று கூறும் ரசிகர்கள்; இது கமர்ஷியல் படமாக இருந்தாலும் கண்டிப்பாக மக்களுக்கும், சமூகத்துக்கு தேவையான கருத்தைத்தான் சொல்லும்வகையில் அமைந்திருக்கும் என்கின்றனர். படத்தின் டைட்டில் டீசர் நல்ல வரவேற்பையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

தலைவர் 171: வேட்டையன் படத்தை முடித்துவிட்டு தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார் ரஜினி. அதனை கோலிவுட்டின் இப்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. எனவே அதனை இதில் போக்கும் விதமாகவும்; கமல் ஹாசனுக்கு விக்ரம் படத்தை வைத்து எப்படி பிரமாண்ட வெற்றியை கொடுத்தோமோ அதேபோல் ரஜினிக்கும் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது டீமுடன் படத்துக்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

சௌந்தர்யா இயக்கத்தில்: இந்நிலையில் ரஜினிகாந்த்தின் புதிய படம் பற்றி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் தனது இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். மோஷன் கேப்சரில் உருவாகியிருந்த அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X