“அந்த அற்புதமான நாள் வந்துவிட்டது”... #2.0 ரிலீஸ் குறித்து ரஜினி டிவீட்!
#2.0 படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தனது 2.0 படக்குழுவினருக்கு டிவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படம் உலகம் முழுவதும் இன்று ரிலீசாகியுள்ளது. லைகா தயாரித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீசாகியுள்ளது.

இந்நிலையில் தனது 2.0 படக்குழுவிற்கு டிவிட்டர் வாயிலாக ரஜினி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் அவர், "படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். அந்த மகத்தான நாள் வந்து விட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்ற பெருமையும் 2.0விற்கு கிடைத்துள்ளது. நிச்சயம் இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் மூலம் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நேரடியாக தமிழில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











