பிரபு நடிக்கும் 'மீன் குழம்பும் மண் பானையும்'...
சிவாஜி புரொடக்ஷன்ஸ் குடும்பத்திலிருந்து ஒரு கிளை நிறுவனம் உருவாகியுள்ளது. அது ஈஷான் புரொடக்ஷன்ஸ். துஷ்யந்தை நினைவிருக்கிறதா... பிரபுவின் சகோதரர் ராம்குமாரின் மகன். மச்சி என்ற படத்தில் நடித்தார்... அவர்தான் இப்போது ஈஷான் புரொடக்ஷன்ஸை தொடங்கியிருக்கிறார். அவர் மனைவி அபிராமியும் இதில் பங்குதாரர்.
ஈஷான் புரொடக்ஷன்ஸின் முதல் படத்துக்கு மீன் குழம்பும் மண் பானையும் என்று தலைப்பிட்டுள்ளனர். இந்தப் படத்தின் நாயகனாக பிரபு நடிக்கிறார். அவருடன் ஆஷ்னா சவேரி, காளிதாஸ் ஜெயராம் (நடிகர் ஜெயராம் மகன்) உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை அமுதேஷ்வர் இயக்குகிறார். டி இமான் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்குகிறது. ஜனவரி மாதம் மலேசியாவில் படப்பிடிப்பு நடக்கிறது.
சமீபத்தில் படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்ய மலேசியா சென்றிருந்த தயாரிப்பாளரும் இயக்குநரும், அங்கு கபாலி படப்பிடிப்பிலிருந்த ரஜினிகாந்திடம் விவரத்தைச் சொல்லி ஆசி பெற்றனர்.
படத்தின் தலைப்பைக் கேட்ட ரஜினி, தலைப்பு நன்றாக உள்ளதாகவும், சிவாஜி புரொடக்ஷன்ஸ் போலவே வெற்றிப் படங்கள் தயாரிக்க வாழ்த்துகள் என்றும் கூறினாராம்.


Click it and Unblock the Notifications











