லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கே: ரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வர மாட்டாரா?

By Siva

சென்னை: ரஜினிகாந்த் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் வரும் 10ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. படத்தின் ட்ரெய்லருக்கே அமோக வரவேற்பு இருந்தது.

அப்படி இருக்கும்போது படத்திற்கு நிச்சயம் பெரும் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் தான் ரஜினிக்கு ஏற்ற இயக்குனர் என்று அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்நிலையில் ரஜினி மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

ஏ.ஆர். முருகதாஸ்

ஏ.ஆர். முருகதாஸ்

ஓய்வெடுக்க அமெரிக்கா சென்றுள்ள ரஜினி நாடு திரும்பியதும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அதை முடித்த பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் திட்டமும் உள்ளதாம்.

கட்சி

கட்சி

அரசியலுக்கு வருகிறேன் என்று கூறி ஓராண்டு நிறைவடைந்தும் ரஜினி இன்னும் கட்சி துவங்கவில்லை. இந்நிலையில் அடுத்தடுத்து புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிக் கொண்டிருக்கிறார். இப்படியே போனால் அவர் எப்பொழுது தான் அரசியலுக்கு வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வர மாட்டார்

வர மாட்டார்

ரஜினி அரசியலுக்கு வருவார் ஆனால் வர மாட்டார் என்று ஏற்கனவே மக்கள் அவரை கிண்டல் செய்யத் துவங்கிவிட்டனர். இந்நிலையில் அவரின் புதுப்பட திட்டங்கள் குறித்து அறிந்த பிறகு அவர் வரவே மாட்டார் என்று முடிவு செய்துவிட்டார்கள். ஒரு வேளை அவர் கட்சி துவங்கிவிட்டு படங்களிலும் நடிக்கலாம் அல்லவா, யார் கண்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X