ஹீரோ .. ஹீரோ ..

By Staff

சந்திரமுகி படத்தில் ரஜினி அணியும் ஆடைகளை சென்னையைச் சேர்ந்த சிட்னி சிலேடன் என்பவர்தான் வடிவமைத்து வருகிறாராம்.

பாபா மாதிரி தனது ஒரிஜினல் கெட்-அப்பைக் காட்டி ரசிகர்களை டென்சன் ஆக்க விரும்பாத ரஜினி இந்தப் படத்தில் தனது லுக் மற்றும்காஸ்ட்யூம்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் தந்துள்ளார். சூட்டிங்கை ஆரம்பிக்கும் முன் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துஉடம்பில் பளபளப்பை கொஞ்சம் ஏற்றிவிட்டு வந்தார் ரஜினி.

பி.வாசுவின் அப்பா எம்.ஜி.ஆரிடம் மேக்அப் மேனாக இருந்தவர். வாசுவும் மேக்அப் ஆர்ட் தெரிந்தவர். இதனால் அவரும் ரஜினியின்வயதைக் குறைக்க பெரும் சிரத்தை எடுத்து வருகிறார்.

படத்திற்கான காஸ்ட்யூம் டிசைன்களை வழக்கமான சினிமா ஆட்களிடம் ஒப்படைக்காமல் கென்யாவிலிருந்த வந்திருக்கும் சிட்னி சிலேடன்என்பவரிடம் தந்திருக்கிறார் ரஜினி.

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். உலகளவில் மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரானசிலேடன், மிஸ் இண்டியா போட்டிகளில் கலந்து கொள்ளும் அழகிகளுக்கான ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்துப் பிரபலமடைந்தவர்.

பைவ் ஸ்டார், தம் ஆகிய இரு தமிழ்ப் படங்களுக்கும் அவர் ஆடை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். இப்போது சந்திரமுகியில் ரஜினியின்உடைகளை அவர்தான் வடிவமைத்துள்ளார்.


இவரிடம் பேசியபோது, ரஜினியின் தீவிர விசிறியான நான் அவருக்கே டிரஸ் டிசைன் செய்யும் அனுபவம் மிக வித்தியாசமானது. மிகமகிழ்ச்சியாக இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறேன் என்கிறார்.

முன்பெல்லாம் ரஜினியின் ஸ்டாம்ப் சைஸ் போட்டோக்களை சேகரிப்பதை எனது ஹாபியாக வைத்திருந்தேன். இப்போது அவருக்கே டிரஸ்டிசைனிங் செய்கிறேன் என்றால் என் மனம் எவ்வளவு குதூகலத்தில் இருக்கும், நினைத்துப் பாருங்கள் என்றார்.

ரஜினிக்காக இதுவரை மொத்தம் 60 ஆடைகளை வடிவமைத்துள்ளார் சிட்னி சிலேடன். இதில் தனக்குப் பிடித்தவற்றை ரஜினி ஓ.கே.செய்துள்ளார்.

பிரபு, நயனதாரா, அடுத்து நடிக்கப் போகும் ஜோதிகா ஆகியோருக்கெல்லாம் வழக்கமான கோலிவுட் காஸ்ட்யூமர்கள் தான் ஆடைகளைவடிவமைக்கிறார்கள்.

படம் குறித்த இன்ன பிற தகவல்கள்:

வித்யாசகர் இசையமைக்கப் போகும் இந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்களாம். இரண்டே சண்டைக் காட்சிகள் தானாம். சண்டைக்காட்சிகளை ஒருங்கிணைக்கப் போவது தளபதி பட புகழ் தினேஷ்.

பாடல்களை எழுதுவது வாலியும் பா.விஜய்யும். ஒளிப்பதிவை கவனிப்பது சேகர் வி. ஜோசப், எடிட்டிங் வேலையை செய்வது ஆண்டனி,ஆர்ட் டைரக்ஷன் பொறுப்பை ஏற்றுள்ளது தோட்டா தரணி.

ரஜினி-நயனதாரா ஆடப் போகும் ஒரு பாடல் காட்சியை நியூசிலாந்தில் எடுக்கப் போகிறார்கள். இதற்காக இம் மாதம் படக் குழுஆக்லாந்துக்கு பறக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X