ஹீரோ .. ஹீரோ ..

By Staff
ரஜினி சமீபத்தில் மூன்று நட்சத்திர ஹோட்டலை வளைத்துப் போட்டுள்ளார். அதை வாங்கியிருப்பது பொறந்து, வளர்ந்து, புரண்ட தனதுதாய் மண்ணான பெங்களூரில்.

பஸ் கண்டக்டராக பெங்களூரில் வாழ்க்கையை துவங்கி, எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களின் போஸ்டர்களை கன்னட அமைப்புகளுடன்இணைந்து கிழித்து எறிவது, தமிழ் சினிமாவுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்வது என காலம் போராடி வந்த ரஜினிகாந்த்,கே.பாலச்சந்தரின் ஆசியால் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

கோடிகளைக் குவித்துவிட்ட ரஜினி பெங்களூர், மைசூர், தாவணகரே உள்பட கர்நாடகத்தின் பல பகுதிகளிலும் ஏராளமான சொத்துக்களைவாங்கிப் போட்டுள்ளார். அப்படியே ஆந்திராவிலும் ஏகப்பட்ட முதலீடுகள் உண்டு.

சென்னையில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தைக் கட்டினார். மற்றபடி பெரிய அளவில் தமிழகத்தில் முதலீடுகளை வைத்துக்கொள்ளவில்லை. ஆஸ்ரம் என்ற பள்ளியை ஆரம்பித்து அதை கல்லூரியாக விரிவாக்க ரஜினி, அடுத்து விஜய்காந்த் பாணியில் நல்லவரும்படி தரும் பொறியியல் கல்லூரி ஒன்றைத் துவக்கும் திட்டமும் வைத்திருக்கிறார்.

இதற்காக சமீபத்தில் ஒரு பொறியியல் கல்லூரிக்கு திக் விஜயம் செய்தார் லதா ரஜினிகாந்த்.

மாப்பிள்ளை தனுஷ்-மகள் ஐஸ்வர்யாவுக்கு சில கோடிகளில் ஒரு மாபெரும் பங்களாவை சென்னையில் வாங்கித் தந்த ரஜினி, இப்போதுபெங்களூரில் ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலை விலைக்கு வாங்கியுள்ளாராம்.

சமீப காலமாக இது நஷ்டத்தில் இயங்கி வந்ததாகவும், அதை வாங்கி புதுப்பித்து லாபகரமாக இயக்க ரஜினி முடிவு செய்துள்ளாராம். சிலவாரங்களுக்கு முன்புதான் இந்த டீல் முடிந்ததாம்.

கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை இருந்த இந்த டீல் குறித்து மோப்பம் பிடித்து தான் சில வாரங்களுக்கு முன் வருமானவரித்துறையினர் ரஜினி வீட்டை நோக்கி குறி வைத்துப் பாய்ந்தனர் என்றும் சொல்கிறார்கள்.

பெங்களூர் முக்கிய ஏரியாக்களில் ஒரு சதுர அடி நிலத்தின் விலை ரூ. 5,000 முதல் ரூ. 7,000 வரை என்பது உங்களுக்குத் தெரியுமோ?.இப்போது ரஜினியால் வாங்கப்பட்டுள்ள ஹோட்டலின் விலை பல பல கோடிகளாம்.

தாய் மண்ணே வணக்கம் !..


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X