ஹீரோ .. ஹீரோ ..
தனது அடுத்த படத்துக்காக கதை தேடி வரும் ரஜினிகாந்த் சமீபத்தில் பெங்களூர் வந்து சில கன்னடப் படங்களையும்பார்த்துவிட்டுச் சென்றார்.
பாபாவுக்கு விழுந்த அடியை அடுத்து ஒரு நல்ல படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ரஜினி தனது நண்பரும்தெலுங்கு நடிகருமான மோகன்பாபுவுடன் பெங்களூர் வந்தார்.
இங்கு ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் நடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு படம் ரஜினிக்குக் காட்டப்பட்டது.பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் விஷேச காட்சி திரையிடப்பட்டது.
மோகன்பாபு, தனது கன்னட நண்பர்களுடன் அந்தப் படத்தைப் பார்த்தார் ரஜினி.
தவிரகே பா தங்கி என்ற அந்தப் படம் அண்ணன்- தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டது. கிட்டத்தட்ட சிவாஜி நடித்தபாசமலரின் உல்டா தான் இந்தப் படம். கன்னடத்தில் இப் படம் வெள்ளிவிழாவைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
இது தவிர கதையம்சம் உள்ள மேலும் சில படங்களையும் பார்த்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினி.
தனது அடுத்த படத்துக்காக நல்ல கதையை தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கிறார் ரஜினி. பாபா படத்தின் படுதோல்வியால் நல்லகதை கிடைத்தால் மட்டுமே படத்தை எடுப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











