ஹீரோ .. ஹீரோ ..
பொதுக் கூட்டங்களில் தனது பேச்சை முடிக்கும்போது இதுவரை ஜெய்ஹிந்த் மட்டுமே கூறி வந்த ரஜினி புதிதாகவாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு என்ற வார்த்தைகளையும் சேர்த்துக் கூற ஆரம்பித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்திற்கு அரசியலில் புகும் ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, அவரது ரசிகர்கள் மத்தியில் இந்தஎதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. இப்போது இல்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் அவர்அரசியலுக்கு வருவார் என்று அவர்கள் நம்புகின்றனர்.
காவிரி விவகாரம் உச்ச கட்டத்தில் இருந்தபோது நான் முதலில் இந்தியன், பின்னர் தமிழன் என்று பேசினார் ரஜினி.அப்போதைய கூட்டங்களில் எல்லாம் ஜெய்ஹிந்த் என்று சொல்லியே தனது உரையை முடித்தார்.
இந் நிலையில் இப்போது தமிழகத்தையும் தமிழையும் வாழ்த்திப் பேச ஆரம்பித்துள்ளார் ரஜினி.
சென்னையில் திரைப்பட லைட்ஸ்மேன் சங்க நல நிதிக்காக கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் ரஜினி, கமல்,விஜயகாந்த் உள்ளிட்ட திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
நடிகர், நடிகையர் கலந்து கொண்ட ஆடல், பாடல், நாடக, மிமிக்ரி நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெற்றன.
இதில் பேசிய ரஜினி காந்த், தனது உரையை முடித்தபோது வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த் என்றவாசகங்களோடு நிறைவு செய்தார்.
ரஜினியிடம் ஏன் இந்த திடீர் மாற்றம் என்று புரியவில்லை.


Click it and Unblock the Notifications











