பாலச்சந்தர் படத்தில் ரஜினி-கமல்? இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில், அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் உருவாகிவரும் "பொய் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், கலைஞானி கமல்ஹாசனும் இணைந்து நடிக்கவிருப்பதாக செய்திகள்பரவியுள்ளன.குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்த கமல்ஹாசன் விடலைப் பருவ வயதை அடைந்தவுடன் 1974ல் "அவள் ஒரு தொடர்கதைமூலம் வாலிப நடிகனாக கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டார். அதற்குப் பிறகு பாலச்சந்தரின் முதன்மை நாயகனாக கமல் விளங்கினார்.இதேபோல 1975ல் வெளியான பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரஜினிகாந்த்.அந்தப் படத்தின் கடைசி காட்சியில் தான் ரஜினி வருவார். ஆனால் இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார். பாலச்சந்தரால் அடையாளம் காட்டப்பட்ட இந்த இரு சூப்பர் ஸ்டார்களும் தமிழ் சினிமாவின் இரட்டைக் குழல் துப்பாக்கியாகஉள்ளார்கள். கமலும், ரஜினியும் சேர்ந்து பல படங்களில் முன்பு இணைந்து நடித்தார்கள். இருவரும் இணைந்து கடைசியாக நடித்த படம் நினைத்தாலே இனிக்கும். அதன் பிறகு தனித் தனியாக நடிக்க ஆரம்பித்தார்கள்.இருவரும் இணைந்து நடித்த அனைத்துப் படங்களுமே சூப்பர் ஹிட் படங்கள். மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும்,ஆடுபுலி ஆட்டம், 16 வயதினிலே என ஹிட் பட்டியல் மிகப் பெரியது.தனித்தனியாக நடித்து வரும் இருவரும் மீண்டும் இணைவது குறித்து அவ்வப்போது தனித்தனியாக தங்களது ஆசையைவெளிப்படுத்தி வந்தனர். இந்த ஆசை இப்போது நிறைவேறப் போவதாக தெரிகிறது. பாலச்சந்தரின் 75வது பிறந்த நாள் விழாவும், பொய் படத் தொடக்க விழாவும் ஒரே விழாவாக நடத்தப்பட்டது. இதில் கமலும்,ரஜினியும் கலந்து கொண்டனர். அப்போது பேசுகையில், பொய் படத்தில் தங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் நடிக்கக்காத்திருக்கிறோம் என பேசினர். இதை மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்களோ தெரியாது, ஆனால் பாலச்சந்தர் இந்த விஷயத்தை ரொம்ப சீரியஸாகஎடுத்துக் கொண்டாராம்.பொய் படத்தில் இருவருக்காகவும் ஒரு சூப்பர் கேரக்டரை பாலச்சந்தர் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்தஅறிவிப்பை பாலச்சந்தரே வெளியிடலாம் என்று கூறுகிறார்கள். பொய் படத்தில் கமலும், ரஜினியும் நடிப்பதாக இருந்தால், கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணையும்முதல் படமாக அமையும், ரசிகர்களுக்கு அது பெரும் விருந்தாக இருக்கும்.

By Staff

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில், அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் உருவாகிவரும் "பொய் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், கலைஞானி கமல்ஹாசனும் இணைந்து நடிக்கவிருப்பதாக செய்திகள்பரவியுள்ளன.

குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்த கமல்ஹாசன் விடலைப் பருவ வயதை அடைந்தவுடன் 1974ல் "அவள் ஒரு தொடர்கதைமூலம் வாலிப நடிகனாக கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதற்குப் பிறகு பாலச்சந்தரின் முதன்மை நாயகனாக கமல் விளங்கினார்.

இதேபோல 1975ல் வெளியான பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரஜினிகாந்த்.அந்தப் படத்தின் கடைசி காட்சியில் தான் ரஜினி வருவார். ஆனால் இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார்.


பாலச்சந்தரால் அடையாளம் காட்டப்பட்ட இந்த இரு சூப்பர் ஸ்டார்களும் தமிழ் சினிமாவின் இரட்டைக் குழல் துப்பாக்கியாகஉள்ளார்கள். கமலும், ரஜினியும் சேர்ந்து பல படங்களில் முன்பு இணைந்து நடித்தார்கள்.

இருவரும் இணைந்து கடைசியாக நடித்த படம் நினைத்தாலே இனிக்கும். அதன் பிறகு தனித் தனியாக நடிக்க ஆரம்பித்தார்கள்.

இருவரும் இணைந்து நடித்த அனைத்துப் படங்களுமே சூப்பர் ஹிட் படங்கள். மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும்,ஆடுபுலி ஆட்டம், 16 வயதினிலே என ஹிட் பட்டியல் மிகப் பெரியது.

தனித்தனியாக நடித்து வரும் இருவரும் மீண்டும் இணைவது குறித்து அவ்வப்போது தனித்தனியாக தங்களது ஆசையைவெளிப்படுத்தி வந்தனர். இந்த ஆசை இப்போது நிறைவேறப் போவதாக தெரிகிறது.


பாலச்சந்தரின் 75வது பிறந்த நாள் விழாவும், பொய் படத் தொடக்க விழாவும் ஒரே விழாவாக நடத்தப்பட்டது. இதில் கமலும்,ரஜினியும் கலந்து கொண்டனர். அப்போது பேசுகையில், பொய் படத்தில் தங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் நடிக்கக்காத்திருக்கிறோம் என பேசினர்.

இதை மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்களோ தெரியாது, ஆனால் பாலச்சந்தர் இந்த விஷயத்தை ரொம்ப சீரியஸாகஎடுத்துக் கொண்டாராம்.

பொய் படத்தில் இருவருக்காகவும் ஒரு சூப்பர் கேரக்டரை பாலச்சந்தர் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்தஅறிவிப்பை பாலச்சந்தரே வெளியிடலாம் என்று கூறுகிறார்கள்.

பொய் படத்தில் கமலும், ரஜினியும் நடிப்பதாக இருந்தால், கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணையும்முதல் படமாக அமையும், ரசிகர்களுக்கு அது பெரும் விருந்தாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X