»   »  ரஜினியின் இரண்டு படங்கள் ரஜினி அடுத்து இரண்டே இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பார் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.பாபாவின் படுதோல்விக்குப் பின் அச்சத்துடனேயே ரஜினி நடித்து வெளி வந்த படம் சந்திரமுகி. இந்தப் படம் முந்தைய ரஜினிபடத்தின் ரெக்கார்டுகளை எல்லாம் உடைத்து எறிந்து வசூல் ஈட்டி சாதனை படைத்துவிட்டதில் மிகவும் மகிழ்ச்சியாகஇருக்கிறார் ரஜினி.தமிழகம் முழுவதும் இன்னும் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்த சிவாஜிகுடும்பத்தினருக்கும் இந்தப் படம் புதிய பாதையை அமைத்துத் தந்துவிட்டது. கொஞ்ச காலமாக ஓய்ந்து போயிருந்த சிவாஜிபிலிம்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து படத் தயாரிப்பில் இறங்கத் தயாராகிவிட்டது. இந் நிலையில் தனது அடுத்த படத்துக்குத் தயாராகி வருகிறார் ரஜினி. பலரும் ரஜினிடம் கதைகளை சொல்லி வருகிறார்கள்.ஆனால், இதுவரை எந்தக் கதையும் ரஜினிக்குப் பிடிக்கவில்லையாம்.சமீபத்தில் தெலுங்கு உலகின் முன்னணி தயாரிப்பாளரான பூர்ணசந்திர ராவ் ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளார். ரஜினியைவைத்து இந்தியில் அந்தா கானூன் மற்றும் ஜான் ஜானி ஜனார்த்தன் ஆகிய படங்களைத் தயாரித்துள்ள ராவ் தமிழிலும் சிலபடங்களை எடுத்துள்ளார். ஜான் ஜானி ஜனார்த்தன் படத்தின் ரஜினி மூன்று வேடங்கள் செய்தார்.அந்த இரு இந்திப் படங்களும் ரஜினியை பாலிவுட்டிலும் ஆக்ஷன் ஹீரோவாக நிலை நிறுத்தின. ஆனால், தமிழில் அடுத்தடுத்துவெற்றிப் படங்கள் குவிந்ததால் இந்தியை விட்டு ரஜினியே விலகி வந்துவிட்டார்.இப்போது பூர்ணசந்திர ராவ் ரஜினியை வைத்து மீண்டும் படம் எடுக்க ஆர்வமாய் இருக்கிறாராம். சில கதைகளையும் கை வசம்வைத்துக் கொண்டு ரஜினியை சந்தித்துப் பேசிவிட்டுப் போயிருக்கிறார். ராவ் மற்றும் ரஜினியின் நெருங்கிய நண்பரானஅமிதாப்பச்சனும் ரஜினியிடம் ராவுக்கு ஒரு படம் செய்யச் சொல்லி பரிந்துரைத்துள்ளார் என்கிறார்கள்.ரஜினியின் அடுத்த படத்தை பி.வாசுவே இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பூர்ணசந்திர ராவ் சொன்ன சில கதைகளில் வாசுஒரு கதையை செலக்ட் செய்துள்ளாராம். கதையை டெவலப் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன.இந் நிலையில் ரஜினியின் அரசியல் நண்பர் ஆர்.எம். வீரப்பனும் தனது சத்யா மூவிசுக்காக ஒரு படம் செய்யச் சொல்லி கேட்டுக்கொண்டிருக்கிறாராம். இருவரும் கைகோர்த்த பாட்சா படம் இன்றும் ரஜினியின் பெஸ்ட் ஆக்ஷன் படங்களில் ஒன்றாககருதப்படுவது குறிப்பிடத்தக்கது.ஆனால், ஆர்.எம்.விக்கு ரஜினி இதுவரை உறுதிமொழி ஏதும் தரவில்லையாம். மேலும் தனது வயதையும் இமேஜையும்கருத்தில் கொண்டு இனி மேல் அதிக படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு ரஜினி வந்துவிட்டதாக சொல்கிறார்கள். அடுத்து இரண்டே படங்களை நச் என்று செய்து சூப்பர் டூப்பர் வெற்றியாக்கிவிட்டு அப்படியே கோலிவுட்டில் இருந்து ஒதுங்கிதனக்கு மிகப் பிடித்த ஆன்மீகம் பக்கமாக நகர ரஜினி முடிவு செய்துள்ளாராம்.அதே நேரத்தில் இதில் ஒரு படத்தை தனது குரு கே. பாலசந்தர் தயாரிக்க வேண்டும் என ரஜினி நினைக்கிறாராம்.கவிதாலயாவுக்காக ஒரு படம் செய்யும் ஆசையை கே.பியிடம் தெரிவித்துள்ள ரஜினி, கதையையும் தயார் செய்யச்சொல்லிவிட்டாராம்.ஆக, கவிதாலயாவுக்கு ஒரு படம் போக இன்னொரு படத்தை பூர்ணசந்திர ராவுக்கு ரஜினி செய்வாரா அல்லது வேறுயாருக்காவது உதவும் வகையில் (சிவாஜி குடும்பத்தினருக்கு உதவியது மாதிரி) நடித்துத் தருவாரா என்று தெரியவில்லை.எப்படியானாலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டே படங்களோடு உச்சத்தில் இருக்கும்போதே ஒதுங்கிக் கொள்ள ரஜினிமுடிவு செய்துவிட்டார் என்கிறார்கள்.

ரஜினியின் இரண்டு படங்கள் ரஜினி அடுத்து இரண்டே இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பார் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.பாபாவின் படுதோல்விக்குப் பின் அச்சத்துடனேயே ரஜினி நடித்து வெளி வந்த படம் சந்திரமுகி. இந்தப் படம் முந்தைய ரஜினிபடத்தின் ரெக்கார்டுகளை எல்லாம் உடைத்து எறிந்து வசூல் ஈட்டி சாதனை படைத்துவிட்டதில் மிகவும் மகிழ்ச்சியாகஇருக்கிறார் ரஜினி.தமிழகம் முழுவதும் இன்னும் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்த சிவாஜிகுடும்பத்தினருக்கும் இந்தப் படம் புதிய பாதையை அமைத்துத் தந்துவிட்டது. கொஞ்ச காலமாக ஓய்ந்து போயிருந்த சிவாஜிபிலிம்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து படத் தயாரிப்பில் இறங்கத் தயாராகிவிட்டது. இந் நிலையில் தனது அடுத்த படத்துக்குத் தயாராகி வருகிறார் ரஜினி. பலரும் ரஜினிடம் கதைகளை சொல்லி வருகிறார்கள்.ஆனால், இதுவரை எந்தக் கதையும் ரஜினிக்குப் பிடிக்கவில்லையாம்.சமீபத்தில் தெலுங்கு உலகின் முன்னணி தயாரிப்பாளரான பூர்ணசந்திர ராவ் ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளார். ரஜினியைவைத்து இந்தியில் அந்தா கானூன் மற்றும் ஜான் ஜானி ஜனார்த்தன் ஆகிய படங்களைத் தயாரித்துள்ள ராவ் தமிழிலும் சிலபடங்களை எடுத்துள்ளார். ஜான் ஜானி ஜனார்த்தன் படத்தின் ரஜினி மூன்று வேடங்கள் செய்தார்.அந்த இரு இந்திப் படங்களும் ரஜினியை பாலிவுட்டிலும் ஆக்ஷன் ஹீரோவாக நிலை நிறுத்தின. ஆனால், தமிழில் அடுத்தடுத்துவெற்றிப் படங்கள் குவிந்ததால் இந்தியை விட்டு ரஜினியே விலகி வந்துவிட்டார்.இப்போது பூர்ணசந்திர ராவ் ரஜினியை வைத்து மீண்டும் படம் எடுக்க ஆர்வமாய் இருக்கிறாராம். சில கதைகளையும் கை வசம்வைத்துக் கொண்டு ரஜினியை சந்தித்துப் பேசிவிட்டுப் போயிருக்கிறார். ராவ் மற்றும் ரஜினியின் நெருங்கிய நண்பரானஅமிதாப்பச்சனும் ரஜினியிடம் ராவுக்கு ஒரு படம் செய்யச் சொல்லி பரிந்துரைத்துள்ளார் என்கிறார்கள்.ரஜினியின் அடுத்த படத்தை பி.வாசுவே இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பூர்ணசந்திர ராவ் சொன்ன சில கதைகளில் வாசுஒரு கதையை செலக்ட் செய்துள்ளாராம். கதையை டெவலப் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன.இந் நிலையில் ரஜினியின் அரசியல் நண்பர் ஆர்.எம். வீரப்பனும் தனது சத்யா மூவிசுக்காக ஒரு படம் செய்யச் சொல்லி கேட்டுக்கொண்டிருக்கிறாராம். இருவரும் கைகோர்த்த பாட்சா படம் இன்றும் ரஜினியின் பெஸ்ட் ஆக்ஷன் படங்களில் ஒன்றாககருதப்படுவது குறிப்பிடத்தக்கது.ஆனால், ஆர்.எம்.விக்கு ரஜினி இதுவரை உறுதிமொழி ஏதும் தரவில்லையாம். மேலும் தனது வயதையும் இமேஜையும்கருத்தில் கொண்டு இனி மேல் அதிக படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு ரஜினி வந்துவிட்டதாக சொல்கிறார்கள். அடுத்து இரண்டே படங்களை நச் என்று செய்து சூப்பர் டூப்பர் வெற்றியாக்கிவிட்டு அப்படியே கோலிவுட்டில் இருந்து ஒதுங்கிதனக்கு மிகப் பிடித்த ஆன்மீகம் பக்கமாக நகர ரஜினி முடிவு செய்துள்ளாராம்.அதே நேரத்தில் இதில் ஒரு படத்தை தனது குரு கே. பாலசந்தர் தயாரிக்க வேண்டும் என ரஜினி நினைக்கிறாராம்.கவிதாலயாவுக்காக ஒரு படம் செய்யும் ஆசையை கே.பியிடம் தெரிவித்துள்ள ரஜினி, கதையையும் தயார் செய்யச்சொல்லிவிட்டாராம்.ஆக, கவிதாலயாவுக்கு ஒரு படம் போக இன்னொரு படத்தை பூர்ணசந்திர ராவுக்கு ரஜினி செய்வாரா அல்லது வேறுயாருக்காவது உதவும் வகையில் (சிவாஜி குடும்பத்தினருக்கு உதவியது மாதிரி) நடித்துத் தருவாரா என்று தெரியவில்லை.எப்படியானாலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டே படங்களோடு உச்சத்தில் இருக்கும்போதே ஒதுங்கிக் கொள்ள ரஜினிமுடிவு செய்துவிட்டார் என்கிறார்கள்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி அடுத்து இரண்டே இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பார் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.

பாபாவின் படுதோல்விக்குப் பின் அச்சத்துடனேயே ரஜினி நடித்து வெளி வந்த படம் சந்திரமுகி. இந்தப் படம் முந்தைய ரஜினிபடத்தின் ரெக்கார்டுகளை எல்லாம் உடைத்து எறிந்து வசூல் ஈட்டி சாதனை படைத்துவிட்டதில் மிகவும் மகிழ்ச்சியாகஇருக்கிறார் ரஜினி.

தமிழகம் முழுவதும் இன்னும் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்த சிவாஜிகுடும்பத்தினருக்கும் இந்தப் படம் புதிய பாதையை அமைத்துத் தந்துவிட்டது. கொஞ்ச காலமாக ஓய்ந்து போயிருந்த சிவாஜிபிலிம்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து படத் தயாரிப்பில் இறங்கத் தயாராகிவிட்டது.


இந் நிலையில் தனது அடுத்த படத்துக்குத் தயாராகி வருகிறார் ரஜினி. பலரும் ரஜினிடம் கதைகளை சொல்லி வருகிறார்கள்.ஆனால், இதுவரை எந்தக் கதையும் ரஜினிக்குப் பிடிக்கவில்லையாம்.

சமீபத்தில் தெலுங்கு உலகின் முன்னணி தயாரிப்பாளரான பூர்ணசந்திர ராவ் ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளார். ரஜினியைவைத்து இந்தியில் அந்தா கானூன் மற்றும் ஜான் ஜானி ஜனார்த்தன் ஆகிய படங்களைத் தயாரித்துள்ள ராவ் தமிழிலும் சிலபடங்களை எடுத்துள்ளார். ஜான் ஜானி ஜனார்த்தன் படத்தின் ரஜினி மூன்று வேடங்கள் செய்தார்.

அந்த இரு இந்திப் படங்களும் ரஜினியை பாலிவுட்டிலும் ஆக்ஷன் ஹீரோவாக நிலை நிறுத்தின. ஆனால், தமிழில் அடுத்தடுத்துவெற்றிப் படங்கள் குவிந்ததால் இந்தியை விட்டு ரஜினியே விலகி வந்துவிட்டார்.

இப்போது பூர்ணசந்திர ராவ் ரஜினியை வைத்து மீண்டும் படம் எடுக்க ஆர்வமாய் இருக்கிறாராம். சில கதைகளையும் கை வசம்வைத்துக் கொண்டு ரஜினியை சந்தித்துப் பேசிவிட்டுப் போயிருக்கிறார். ராவ் மற்றும் ரஜினியின் நெருங்கிய நண்பரானஅமிதாப்பச்சனும் ரஜினியிடம் ராவுக்கு ஒரு படம் செய்யச் சொல்லி பரிந்துரைத்துள்ளார் என்கிறார்கள்.

ரஜினியின் அடுத்த படத்தை பி.வாசுவே இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பூர்ணசந்திர ராவ் சொன்ன சில கதைகளில் வாசுஒரு கதையை செலக்ட் செய்துள்ளாராம். கதையை டெவலப் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன.

இந் நிலையில் ரஜினியின் அரசியல் நண்பர் ஆர்.எம். வீரப்பனும் தனது சத்யா மூவிசுக்காக ஒரு படம் செய்யச் சொல்லி கேட்டுக்கொண்டிருக்கிறாராம். இருவரும் கைகோர்த்த பாட்சா படம் இன்றும் ரஜினியின் பெஸ்ட் ஆக்ஷன் படங்களில் ஒன்றாககருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஆர்.எம்.விக்கு ரஜினி இதுவரை உறுதிமொழி ஏதும் தரவில்லையாம். மேலும் தனது வயதையும் இமேஜையும்கருத்தில் கொண்டு இனி மேல் அதிக படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு ரஜினி வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.


அடுத்து இரண்டே படங்களை நச் என்று செய்து சூப்பர் டூப்பர் வெற்றியாக்கிவிட்டு அப்படியே கோலிவுட்டில் இருந்து ஒதுங்கிதனக்கு மிகப் பிடித்த ஆன்மீகம் பக்கமாக நகர ரஜினி முடிவு செய்துள்ளாராம்.

அதே நேரத்தில் இதில் ஒரு படத்தை தனது குரு கே. பாலசந்தர் தயாரிக்க வேண்டும் என ரஜினி நினைக்கிறாராம்.கவிதாலயாவுக்காக ஒரு படம் செய்யும் ஆசையை கே.பியிடம் தெரிவித்துள்ள ரஜினி, கதையையும் தயார் செய்யச்சொல்லிவிட்டாராம்.

ஆக, கவிதாலயாவுக்கு ஒரு படம் போக இன்னொரு படத்தை பூர்ணசந்திர ராவுக்கு ரஜினி செய்வாரா அல்லது வேறுயாருக்காவது உதவும் வகையில் (சிவாஜி குடும்பத்தினருக்கு உதவியது மாதிரி) நடித்துத் தருவாரா என்று தெரியவில்லை.

எப்படியானாலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டே படங்களோடு உச்சத்தில் இருக்கும்போதே ஒதுங்கிக் கொள்ள ரஜினிமுடிவு செய்துவிட்டார் என்கிறார்கள்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil