கன்னடப் படத்தில் ரஜினி? நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கன்னடப் படத்தில் ரஜினி தலை காட்டப் போகிறாராம். சந்திரமுகி படு ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பதால் ரஜினியின் அடுத்த கால்ஷீட் யாருக்கு என்பதில் பெரிய போட்டியே நிலவிக்கொண்டிருக்கிறது. ரஜினியின் கால்ஷீட் யாருக்கு கிடைக்கும் என்பது தான் இப்போதைய கோலிவுட்டின் ஹாட் "டாக்காகஇருக்கிறது.ரஜினியும் தன் பங்கிற்கு கால்ஷீட் கேட்பவர்களைக் கூப்பிட்டு தனது பெங்களூர் பங்களாவில் கதை கேட்டு வருகிறார். இந் நிலையில் ரஜினி சத்தம் போடாமல் ஒரு கன்னடப் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாக பேச்சு கிளம்பியுள்ளது. முழுநாயகனாக இல்லாமல் கெஸ்ட் ரோலில் இந்தக் கன்னடப் படத்தில் நடிக்கப் போகிறாராம் ரஜினி. இந்தப் படத்தைத் தயாரித்து நடிக்கப் போவது கிரேஸி ஸ்டார் ரவிச்சந்திரன். இதே ரவிச்சந்திரனின் தந்தை வீராசாமிதயாரிப்பில் ரஜினி நடித்த படிக்காதவன் தமிழில் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு ரவிச்சந்திரன் தயாரிப்பில் படம் ஏதும்செய்யவில்லை ரஜினி. இந் நிலையில் ரவிச்சந்திரன் கன்னடத்தில் தயாரித்து, இயக்கி, இசையமைத்து நடிக்கப் போகும் புதிய படம் ஒன்றில் கெஸ்ட்ரோல் செய்து கொடுக்குமாறு ரஜினியை அணுகியுள்ளார். தனது கேரக்டர் குறித்துக் கேட்ட ரஜினி அதில் இம்ப்ரஸ் ஆகி, சரிஎன்று கூறியுள்ளாராம். இந்த செய்தியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளாராம் ரவிச்சந்திரன். கன்னடப் படத்தில் ரஜினி நடித்து ரொம்ப காலமாகிறது. அவர் நடித்த பல படங்கள் கன்னடத்தில் ரீமேக் ஆகி வெற்றிபெற்றுள்ளன. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேரடி கன்னடப் படம் ஒன்றில் ரஜினி நடிக்கவுள்ளார். ஏற்கனவே கமல்ஹாசன் சுமார் 18 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ராமா பாமா ஷாமா என்ற கன்னடப் படத்தில் (சதிலீலாவதியின் ரீமேக்) ரமேஷ் அரவிந்த்துடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் கமலஹாசனுடன்ஊர்வசி, ஸ்ருதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.ரஜினியும் இப்போது கன்னடப் படம் ஒன்றில் நடிக்கவிருப்பதன் மூலம், கன்னடத்திலும் ரஜினியும், கமலும் மோதிப் பார்க்கப்போகிறார்கள். இதற்கிடையே பி.வாசு ஒரு சூப்பர் கமர்ஷியல் கதை ஒன்றை ரஜினிக்காக ரெடி செய்து விட்டாராம். விரைவில் ரஜினியைசந்தித்து கதையைக் கூறப் போகிறாராம்.

By Staff

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கன்னடப் படத்தில் ரஜினி தலை காட்டப் போகிறாராம்.

சந்திரமுகி படு ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பதால் ரஜினியின் அடுத்த கால்ஷீட் யாருக்கு என்பதில் பெரிய போட்டியே நிலவிக்கொண்டிருக்கிறது. ரஜினியின் கால்ஷீட் யாருக்கு கிடைக்கும் என்பது தான் இப்போதைய கோலிவுட்டின் ஹாட் "டாக்காகஇருக்கிறது.

ரஜினியும் தன் பங்கிற்கு கால்ஷீட் கேட்பவர்களைக் கூப்பிட்டு தனது பெங்களூர் பங்களாவில் கதை கேட்டு வருகிறார்.

இந் நிலையில் ரஜினி சத்தம் போடாமல் ஒரு கன்னடப் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாக பேச்சு கிளம்பியுள்ளது. முழுநாயகனாக இல்லாமல் கெஸ்ட் ரோலில் இந்தக் கன்னடப் படத்தில் நடிக்கப் போகிறாராம் ரஜினி.

இந்தப் படத்தைத் தயாரித்து நடிக்கப் போவது கிரேஸி ஸ்டார் ரவிச்சந்திரன். இதே ரவிச்சந்திரனின் தந்தை வீராசாமிதயாரிப்பில் ரஜினி நடித்த படிக்காதவன் தமிழில் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு ரவிச்சந்திரன் தயாரிப்பில் படம் ஏதும்செய்யவில்லை ரஜினி.

இந் நிலையில் ரவிச்சந்திரன் கன்னடத்தில் தயாரித்து, இயக்கி, இசையமைத்து நடிக்கப் போகும் புதிய படம் ஒன்றில் கெஸ்ட்ரோல் செய்து கொடுக்குமாறு ரஜினியை அணுகியுள்ளார். தனது கேரக்டர் குறித்துக் கேட்ட ரஜினி அதில் இம்ப்ரஸ் ஆகி, சரிஎன்று கூறியுள்ளாராம்.


இந்த செய்தியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளாராம் ரவிச்சந்திரன்.

கன்னடப் படத்தில் ரஜினி நடித்து ரொம்ப காலமாகிறது. அவர் நடித்த பல படங்கள் கன்னடத்தில் ரீமேக் ஆகி வெற்றிபெற்றுள்ளன. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேரடி கன்னடப் படம் ஒன்றில் ரஜினி நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே கமல்ஹாசன் சுமார் 18 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ராமா பாமா ஷாமா என்ற கன்னடப் படத்தில் (சதிலீலாவதியின் ரீமேக்) ரமேஷ் அரவிந்த்துடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் கமலஹாசனுடன்ஊர்வசி, ஸ்ருதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ரஜினியும் இப்போது கன்னடப் படம் ஒன்றில் நடிக்கவிருப்பதன் மூலம், கன்னடத்திலும் ரஜினியும், கமலும் மோதிப் பார்க்கப்போகிறார்கள்.

இதற்கிடையே பி.வாசு ஒரு சூப்பர் கமர்ஷியல் கதை ஒன்றை ரஜினிக்காக ரெடி செய்து விட்டாராம். விரைவில் ரஜினியைசந்தித்து கதையைக் கூறப் போகிறாராம்.

Read more about: rajini in kannada film
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X