twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் சிவாஜி ரஜினியின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தை ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கிறது. அந்தப் படத்திற்குசிவாஜி என்று பெயரிடப்பட்டுள்ளது.பாபா படுதோல்வி, தொடர்ந்து ரஜினி எடுத்த தடுமாற்றமான அரசியல் நிலைகள் ஆகியவை காரணமாக ரஜினி ரசிகர்கள்அப்செட் ஆகியிருந்தார்கள். பல இடங்களில் மன்றங்களையே கலைத்து விட்டதாகக் கூட செய்திகள் வந்தன.இந் நிலையில் சந்திரமுகியின் மாபெரும் வெற்றி ரஜினி மீண்டும் தனது பழைய இடத்தைப் பிடித்துவிட்டார். அதே போல பாய்ஸ்படு தோல்விக்குப் பின் அந்நியன் மூலம் பிரமாண்டமான வெற்றி தந்து மீண்டும் முன் வரிசைக்கு வந்துவிட்டார் ஷங்கர்.இந் நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்தும் ஷங்கரின் அடுத்த படம் குறித்தும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிக்க ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகன் தீவிரமாக முயன்றார். படத்தை ரவியின்அண்ணன் ராஜா இயக்கப் போவதாகக் கூட பேசப்பட்டது. இந் நிலையில் மீண்டும் பி.வாசுவையே இயக்குனராக்கி ஒரு படத்தில் நடிக்க ரஜினி திட்டமிட்டார். படத்தை ஏவி.எம்.தயாரிக்கலாம் என்று கூறப்பட்டது.ஜக்குமூலம் மூலம் கைகழுவி விடப்பட்ட கே.எஸ்.ரவிக்குமாருக்கு மீண்டும் தனது படத்தை இயக்க ரஜினி வாய்ப்புத் தரப்போவதாகவும் கூறப்பட்டது.ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வமாக தற்போதுவெளியாகியுள்ளது.ரஜினியை வைத்து 8 சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்துள்ள ஏவி.எம். நிறுவனமே அடுத்த படத்தைத் தயாரிக்கப் போகிறது.இந்தப் படத்தை இயக்கப் போவது ஷங்கர்.ரஜினியும், ஷங்கரும் இணைவது இதுவே முதல் முறையாகும். ஏவி.எம். நிறுவனத்தின் 168வது தயாரிப்பாக ரஜினியின் இந்தபுதிய படம் அமையும். ஷங்கருக்கு இது 9வது படமாகும்.படத்திற்கு சிவாஜி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெரும் பணச் சிக்கலில் தவித்து வந்த ஏவி.எம். நிறுவனம்சரண் இயக்கத்தில் உருவான ஜெமினி படம் மூலம்தான் பொருளாதார ரீதியில் தலை தூக்க முடிந்தது.பிரபல பட நிறுவனமான ஜெமினி நிறுவனத்தின் பெயரையே தங்களது படத்திற்குச் சூட்டி பெரும் வெற்றி கண்டது ஏவி.எம்.அதே செண்டிமென்ட்டில் இன்னொரு பிரபல படத் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி பிலிம்ஸின் பெயரை தனது புதிய படத்திற்குஏவி.எம். சூட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.சந்திரமுகி படத்தை சிவாஜி பிலிம்ஸ்தான் தயாரித்தது நினைவிருக்கலாம். (ரஜினியின் சொந்தப் பெயரும் சிவாஜி(ராவ்) தான்!)ரஜினி படத்தைத் தயாரிக்கப் போவது குறித்து ஏவி.எம். சரவணன் கூறுகையில், இது மிக மகிழ்ச்சியான விஷயம். நீண்டஇடைவெளிக்குப் பிறகு ரஜினி படத்தைத் தயாரிக்கப் போகிறோம். நாங்கள் திருப்தியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறோம். மேலும், ஷங்கர் இப்படத்தை இயக்கவிருப்பது கூடுதல் சந்தோஷம். தமிழ்த திரையுலகில் ஒரு லேண்ட் மார்க் ஆக இப்படம்உருவாகும் என்பதை இப்போதே சொல்லிக் கொள்கிறேன். மிகப் பெரிய வெற்றிப் படமாக இது அமையும் என்றார்.ஷங்கர் கூறுகையில், ரஜினியுடன் இணைவதும், ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கப் போவதும் பெரும் மகிழ்ச்சிதருகிறது. இப்போது எனது பொறுப்பு மேலும் கூடியுள்ளது. அதனால் பயமும் வந்துவிட்டது. நன்றாகச் செய்ய வேண்டும்என்றார்.படத்தின் கதையை தற்போது இறுதி செய்து கொண்டுள்ளார்களாம். விரைவில் படம் குறித்த முழுத் தகவல்களையும் (ஹீரோயின்,காமடியன், இசையமைப்பாளர், பாடலாசிரியர் உள்பட) முறைப்படி அறிவிக்கவுள்ளார்கள்.ரஜினியும், ஷங்கரும் முதல்வன் படத்திலேயே இணைவதாக இருந்தது. ஆனால் படத்தின் கதையைக் கேட்ட ரஜினி அதில் நடிக்கபயந்தார். காரணம் அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் கருணாநிதி. முதல்வன் படத்திலும் கருணாநிதி டைப்பில் வரும்முதல்வரை, ஹீரோ எதிர்ப்பதாக கதை இருந்தது.இதனால் ரஜினி நடிக்க மறுத்ததால் அதில் அர்ஜூனைப் போட்டார் ஷங்கர். படத்தின் பிரமாண்ட வெற்றி பெற்றது.

    By Staff
    |

    ரஜினியின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தை ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கிறது. அந்தப் படத்திற்குசிவாஜி என்று பெயரிடப்பட்டுள்ளது.

    பாபா படுதோல்வி, தொடர்ந்து ரஜினி எடுத்த தடுமாற்றமான அரசியல் நிலைகள் ஆகியவை காரணமாக ரஜினி ரசிகர்கள்அப்செட் ஆகியிருந்தார்கள். பல இடங்களில் மன்றங்களையே கலைத்து விட்டதாகக் கூட செய்திகள் வந்தன.

    இந் நிலையில் சந்திரமுகியின் மாபெரும் வெற்றி ரஜினி மீண்டும் தனது பழைய இடத்தைப் பிடித்துவிட்டார். அதே போல பாய்ஸ்படு தோல்விக்குப் பின் அந்நியன் மூலம் பிரமாண்டமான வெற்றி தந்து மீண்டும் முன் வரிசைக்கு வந்துவிட்டார் ஷங்கர்.

    இந் நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்தும் ஷங்கரின் அடுத்த படம் குறித்தும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

    ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிக்க ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகன் தீவிரமாக முயன்றார். படத்தை ரவியின்அண்ணன் ராஜா இயக்கப் போவதாகக் கூட பேசப்பட்டது.


    இந் நிலையில் மீண்டும் பி.வாசுவையே இயக்குனராக்கி ஒரு படத்தில் நடிக்க ரஜினி திட்டமிட்டார். படத்தை ஏவி.எம்.தயாரிக்கலாம் என்று கூறப்பட்டது.

    ஜக்குமூலம் மூலம் கைகழுவி விடப்பட்ட கே.எஸ்.ரவிக்குமாருக்கு மீண்டும் தனது படத்தை இயக்க ரஜினி வாய்ப்புத் தரப்போவதாகவும் கூறப்பட்டது.

    ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வமாக தற்போதுவெளியாகியுள்ளது.

    ரஜினியை வைத்து 8 சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்துள்ள ஏவி.எம். நிறுவனமே அடுத்த படத்தைத் தயாரிக்கப் போகிறது.இந்தப் படத்தை இயக்கப் போவது ஷங்கர்.

    ரஜினியும், ஷங்கரும் இணைவது இதுவே முதல் முறையாகும். ஏவி.எம். நிறுவனத்தின் 168வது தயாரிப்பாக ரஜினியின் இந்தபுதிய படம் அமையும். ஷங்கருக்கு இது 9வது படமாகும்.

    படத்திற்கு சிவாஜி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெரும் பணச் சிக்கலில் தவித்து வந்த ஏவி.எம். நிறுவனம்சரண் இயக்கத்தில் உருவான ஜெமினி படம் மூலம்தான் பொருளாதார ரீதியில் தலை தூக்க முடிந்தது.

    பிரபல பட நிறுவனமான ஜெமினி நிறுவனத்தின் பெயரையே தங்களது படத்திற்குச் சூட்டி பெரும் வெற்றி கண்டது ஏவி.எம்.அதே செண்டிமென்ட்டில் இன்னொரு பிரபல படத் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி பிலிம்ஸின் பெயரை தனது புதிய படத்திற்குஏவி.எம். சூட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    சந்திரமுகி படத்தை சிவாஜி பிலிம்ஸ்தான் தயாரித்தது நினைவிருக்கலாம். (ரஜினியின் சொந்தப் பெயரும் சிவாஜி(ராவ்) தான்!)

    ரஜினி படத்தைத் தயாரிக்கப் போவது குறித்து ஏவி.எம். சரவணன் கூறுகையில், இது மிக மகிழ்ச்சியான விஷயம். நீண்டஇடைவெளிக்குப் பிறகு ரஜினி படத்தைத் தயாரிக்கப் போகிறோம். நாங்கள் திருப்தியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறோம்.


    மேலும், ஷங்கர் இப்படத்தை இயக்கவிருப்பது கூடுதல் சந்தோஷம். தமிழ்த திரையுலகில் ஒரு லேண்ட் மார்க் ஆக இப்படம்உருவாகும் என்பதை இப்போதே சொல்லிக் கொள்கிறேன். மிகப் பெரிய வெற்றிப் படமாக இது அமையும் என்றார்.

    ஷங்கர் கூறுகையில், ரஜினியுடன் இணைவதும், ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கப் போவதும் பெரும் மகிழ்ச்சிதருகிறது. இப்போது எனது பொறுப்பு மேலும் கூடியுள்ளது. அதனால் பயமும் வந்துவிட்டது. நன்றாகச் செய்ய வேண்டும்என்றார்.

    படத்தின் கதையை தற்போது இறுதி செய்து கொண்டுள்ளார்களாம். விரைவில் படம் குறித்த முழுத் தகவல்களையும் (ஹீரோயின்,காமடியன், இசையமைப்பாளர், பாடலாசிரியர் உள்பட) முறைப்படி அறிவிக்கவுள்ளார்கள்.

    ரஜினியும், ஷங்கரும் முதல்வன் படத்திலேயே இணைவதாக இருந்தது. ஆனால் படத்தின் கதையைக் கேட்ட ரஜினி அதில் நடிக்கபயந்தார். காரணம் அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் கருணாநிதி. முதல்வன் படத்திலும் கருணாநிதி டைப்பில் வரும்முதல்வரை, ஹீரோ எதிர்ப்பதாக கதை இருந்தது.

    இதனால் ரஜினி நடிக்க மறுத்ததால் அதில் அர்ஜூனைப் போட்டார் ஷங்கர். படத்தின் பிரமாண்ட வெற்றி பெற்றது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X