»   »  ஸ்பெயினில் ரஜினி!

ஸ்பெயினில் ரஜினி!

Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்தின் பாடல் காட்சிக்காக ஸ்பெயின் சென்றுள்ளது அந்தப் படத்தின் யூனிட்.

அதை முடித்துவிட்டு ரஜினி, ஷிரியாவோடு நியூயார்க் செல்கிறார் இயக்குனர் ஷங்கர்.


பாடல் காட்சிகளுக்கு இதுவரை நாம் பார்த்திராத லொக்கேசன்களைக் காட்டுவது ஷங்கரின் ஸ்டைல்.படப்பிடிப்பைத் தொடங்கும் முன் மியூசிக் டைரக்டர், கேமராமேன், பாடலாசிரியருடன் லொக்கேசனுக்குச் சென்றுஅங்கு வைத்தே சீன்களையும் பாடல் வரிகளையும் டியூன்களையும் முடிவு செய்வார் ஷங்கர்.

அந்நியன் படத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் அவர் ஒவ்வொரு நாட்டுக்கு நம்மைக் கூட்டிச் சென்று பிரம்மிக்கவைத்தார் ஷங்கர்.

இந் நிலையில் சிவாஜி படத்தின் பாடல் காட்சிகளுக்காக ஸ்பெயினுக்குப் பறந்துள்ளார்கள். ரஜினிக்கு வெள்ளைமுடி கெட்-அப் கொடுத்து செமையான டான்ஸ் ஆட விட்டிருக்கிறாராம் ஷங்கர்.

பாடல் காட்சிகளில் அந்நியனில் சதாவை பிழிந்தது மாதிரி இதில் ஷிரியாவை உண்டு இல்லை என்றுஆக்கியிருக்கிறார்களாம். கேமராமேன் கேவி ஆனந்த், டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா உள்ளிட்ட 30 பேர்கொண்ட டீம் ஸ்பெயினில் பல பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறது.

ஸ்பெயினில் கடும் குளிர் நிலவி வருவதால் முன்னெச்சரிக்கையாக ரஜினியுடன் ஒரு டாக்டரும் ஒருடயட்டீசியனும் சென்றுள்ளார்களாம். ரஜினியின் மனைவி லதா தான் இந்த முன்னேற்பாட்டை செய்தாராம்.


படத்தின் பாடல் காட்சிகளை முடித்துக் கொண்டு நியூயார்க் பறக்கிறார்கள். படத்தின் ஒரு பகுதி அமெரிக்காவில்நடப்பது போல கதையை அமைத்துள்ளார்களாம்.

சண்டைக் காட்சிகளில் ரஜினி தூள் பறக்க வைத்துள்ளாராம் பீட்டர் ஹெயின். நியூயார்க்கிலும் ஒரு சண்டைக்காட்சியை எடுக்கப் போகிறார்களாம்.

சண்டைக் காட்சிகளில் ரஜினி நடந்து வரும்போது.. பாட்ஷா.. பாட்ஷா மாதிரி சிவாஜி.. சிவாஜி என்றுபேக்கிரவுண்டில் படு கிளாசிக்கான ஓசையை அலற விடப் போகிறார்களாம்.

இதற்கிடையே ரஜினியிடம் ஒரு புதிய பழக்கம். சென்னையில் ஷூட்டிங் என்றால் வழக்கமாக பியட் அல்லதுஅம்பாசிடர் காரில் மிக சாதாரணமாக வந்திறங்குவார் ரஜினி. இப்போது அதில் மாற்றம். பென்ஸ் காரில் தான்வருகிறார்.

சிவாஜி படத்தில் தேவிஸ்ரீ, தேவிகா என்ற அக்கா- தங்கையும் நடிக்கிறார்கள்.

திடீரென ஒருநாள் ஷங்கர் போன் செய்து சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையாவின் மகள்களாக நடிக்க முடியுமாஎன்று கேட்க, ரஜினி படம் விட முடியுமா? உடனே ஓ.கே. சொல்லிவிட்டார்களாம்.


சிவப்பா இருக்கிற எங்களை கறுப்பாக மாற்றி நடிக்க வச்சிருக்காங்க என்று புன்னகையுடன் கூறுகின்றார்கள் இந்ததோழிகள்.

இந்த இருவரும் நினைக்காத நேரமில்லை என்ற படத்தில் இருவருமே ஹீரோயின்களாக நடிப்பதுகுறிப்பிடத்தக்கது. அந்தப் படம் 85 சதவீதம் முடிந்தது விட்டதாம். படத்தைத் தயாரிப்பது இவர்களது தந்தைசாமிநாதன் தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil