ஹீரோ .. ஹீரோ ..
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 53வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகுசென்னையில் தனது இல்லத்தில் வைத்து இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார் அவர்.
ரஜினி தனது பிறந்த நாட்களின்போது எப்போதுமே சென்னையிலோ அல்லது வீட்டிலோ இருப்பதில்லை.கர்நாடகத்திற்கோ அல்லது வெளிநாட்டிற்கோ பறந்து விடுவது வழக்கம். இது பல வருடங்களாகவே தொடர்ந்துவருகிறது.
ஆனால் இந்த முறை வித்தியாசமாக தனது பிறந்தநாளை சென்னையிலேயே தனது குடும்பத்தினருடன் கொண்டாடமுடிவு செய்துள்ளார் ரஜினி.
காவிரிப் பிரச்சினையில் ஆரம்பத்தில் ஈடுபாடு காட்டாமல் இருந்தது, பின்னர் தனியாக உண்ணாவிரதம் இருந்தது,கன்னடர்-மராத்தியர் என்ற பிரச்சினை பூதாகரமாக கிளப்பப்பட்டது, தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் துரோகம்இழைத்து விட்டதாக எழுந்துள்ள சர்ச்சைகள் இவற்றிற்கு மத்தியில் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடஉள்ளார் ரஜினி.
இவ்வாறு தமிழக அரசியலில் பல பரபரப்புகளை ஏற்படுத்திய ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்துமுக்கியமான அறிவிப்பு ஒன்றையும் இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவருடையரசிகர்கள் படு பரபரப்புடன் காணப்படுகின்றனர்.
மேலும், இந்த பிறந்த நாளின்போது நதிகள் இணைப்புதொடர்பான தனது மக்கள் இயக்கம் குறித்த அறிவிப்பைஅவர் வெளியிடுவார் என்றும் ரஜினியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கப்பட்டு வந்த ரஜினியின் போயஸ் தோட்ட வீடு தற்போதுபுதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்த வீட்டில் ரஜினி குடும்பத்தினர் சிறப்பு பூஜைகள் செய்து, பால் காய்ச்சி மீண்டும்குடியேறியுள்ளனர்.
இதையடுத்து கடந்த சில மாதங்களாக அடையாறு போட் கிளப் பகுதியில் குடியிருந்து வந்த வாடகை வீட்டைக்காலி செய்து விட்டார் ரஜினி.
ரஜினி சென்னையில் பிறந்த நாள் கொண்டாட உள்ளதால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறுவதற்காகதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவரது ரசிகர்கள் வந்து கொண்டுள்ளனர்.
இதற்கிடையே ரஜினிக்கு தொலைபேசி மூலம் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் வாழ்த்து கூறியதாக அக்கட்சிவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











