ஹீரோ .. ஹீரோ ..
புகை பிடிப்பது போல நடித்து இளைஞர்களைக் கெடுப்பதில் ரஜினி, ஷாருக்கான், சிரஞ்சீவி போன்ற நடிகர்கள்முன்னணியில் இருப்பதாக சர்வதேச சுகாதார அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய சினிமாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள சிகெட்டின் தாக்கம் குறித்து இந்த அமைப்பு ஆய்வு நடத்தியது. இதில்கிடைத்துள்ள விவரங்கள்:
கடந்த 10 ஆண்டுகளில் ஹீரோ அல்லது வில்லன் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இந்திய சினிமாவில் 64மடங்கு அதிகரித்துள்ளது. 74 சதவீத படங்களில் கட்டாய சிகரெட் காட்சி உள்ளது. தாங்கள் விரும்பும் ஹீரோவேஊதித் தள்ளுவதால் இளம் உள்ளங்களில் அது சட்டென பதிந்துவிடுகிறது. அந்த ஹீரேவைைப் போலவே நடந்துகொள்ள முயலும் அவர்களும் புகை பிடிக்க ஆரம்பிக்கின்றனர்.
இதில் இளம் உள்ளங்களைக் கெடுப்பதில் முன்னணியில் இருப்பது ஷாருக் கான் தான். இரண்டாவது இடத்தில்ரஜினிகாந்த் இருக்கிறார். இதில் 5வது இடத்தில் சிரஞ்சீவி இருக்கிறார். இவர்களால் புகை பிடிக்க ஆரம்பித்தவர்கள்எண்ணிக்கை பல்லாயிரத்தைத் தாண்டும்.
பாபா படம் வெளியானபோது ரஜினியின் சிகரெட் காட்சிகளைத் தாக்கி டாக்டர் ராமதாஸ் விட்ட அறிக்கையால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இப்போது மீண்டும் ரஜினியைச் சுற்றி அந்த விவகாரம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











