twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியின் புதிய படம்: ரூ. 50 கோடிக்கு விற்பனை? ஏவி.எம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கும், ரஜினிகாந்த் தனது புதிய படத்துக்காகதிருப்பதிக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு முன் திருப்பதிக்குச் சென்று சாமி கும்பிடுவது ரஜினியின் வழக்கம். அதேபோல படப்பிடிப்புமுடிந்ததும் திருப்பதிக்கு சென்று வருவார்.தற்போது ரஜினியின் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஷங்கரின் இயக்கத்தில் சிவாஜி என்ற படத்தில்நடிக்கவுள்ளார். சந்திரமுகி படத்தின் வெற்றி விழாவின்போது இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகப் போகிறது.இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இதற்கானமுயற்சிகளையும் பேச்சுவார்த்தையையும் ஷங்கர் தொடங்கியுள்ளார். புதிய படத்திற்கான கதைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ள ஷங்கர், படத்தை மிகப் பிரமாண்டமாகஎடுக்கத் திட்டமிட்டுள்ளார். ரஜினியின் படங்களிலேயே மிகக் காஸ்ட்லியானதாகவும் பிரமாண்டமானதாகவும் இதுஇருக்குமாம்.இதனால் பிரமாண்ட நடிகை ஒருவரைப் போட்டால்தான் சரி வரும் என்று அபிப்பிராயப்படும் ஷங்கர், அதற்கு ஐஸ்வர்யாராயை தேர்வு செய்துள்ளார். இதற்கு ரஜினியும் ஓ.கே. சொல்லிவிட்டாராம். தான் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா நடித்ததால் அவருடன் நல்ல பரிச்சயமான ஷங்கர், அவரது கால்ஷீட் பெறும்முயற்சியில் இருக்கிறார். தொடர்ந்து பல இயக்குனர்கள் நச்சரித்தும் தமிழ் பக்கம் கொஞ்ச காலமாக எட்டிப் பார்க்காமல் இருந்தஐஸ்வர்யா ராய்க்கு, இப்போது இந்தியில் பெரிய மார்க்கெட் ஏதும் இல்லை.கூப்பிடுவது ஷங்கர் என்ற பிரமாண்ட இயக்குனர் என்பதால் ஐஸ்வர்யா இம்முறை ஒப்புக் கொள்வார் என்றே தெரிகிறது.பாபாவில் நடிக்க அவர் மறுத்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மனீஷாவப்ை போட்டார்கள்.சந்திரமுகி படத்திற்காகவும் ஐஸ்வர்யாராயைத்தான் முதலில் அணுகினார்கள் (ஜோதிகா வேடத்தில் நடிக்க) என்பதும்குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் கிடைக்காததால், சிம்ரனைப் புக் செய்தார்கள். கடைசியில் அவரும் ஜகா வாங்கவே,ஜோதிகாவை வைத்துப் படத்தை முடித்தார்கள்.இம் முறை ரஜினி, ஐஸ்வர்யா, ஷங்கர் இணைந்தால் தமிழ் சினிமா வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகவும் செலவு பிடிக்கும்படமாக இது இருக்கும் என்கிறார்கள்.காரணம், ரஜினி, ஷங்கர், ஐஸ்வர்யா ராய் ஆகிய 3 பேரின் சம்பளம் மட்டுமே ரூ. 25 கோடிகளைத் தாண்டிவிடும் என்பது தான். ரஜினிக்கு சம்பளம் என்று ரூ. 15 கோடியைத் தந்துள்ளது ஏவி.எம். ஷங்கர் இப்போது ரூ. 5 கோடி வரை (வெளியில் தெரிய)சம்பளமாக வாங்குகிறார். புதுப் படத்துக்கு ரூ. 10 கோடி கேட்டுள்ளார் என்கிறார்கள். ஐஸ்வர்யா ராயின் சம்பளம் ரூ. 5 கோடியில்உள்ளது.இந்த சம்பளங்களுடன், படத் தயாரிப்புக்கும் சேர்த்து இதை எடுத்து முடிக்க ஏவி.எம் ரூ. 40 கோடிக்கு பட்ஜெட்போட்டுள்ளதாம்.ஆனால், படத்தை வாங்க வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் போட்டி போட்டுக் கொண்டு அட்வான்ஸ் பணத்தைக்கொண்டு வந்து கொட்டிவிட்டதால் தைரியமாகக் களமிறங்கத் தயாராகிவிட்டது ஏவி.எம்.இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியான பிற்பகல் முதலே ஏகப்பட்ட வினியோகஸ்தர்கள், சாலிகிராமத்தில் உள்ள ஏவி.எம்.ஸ்டுடியோவில் குவியத் தொடங்கிவிட்டனர். ஏரியா உரிமையைப் பெற எவ்வளவு பெரிய பணத்தையும் அள்ளித் தர அவர்கள்தயாராக உள்ளனர். இதனால் சனிக்கிழமை மாலை 4 மணிக்கே ஏரியா விற்பனையைத் தொடங்கிவிட்டது ஏவி.எம். கிட்டத்தட்ட ஏலம் விடுவது மாதிரி ஏரியா விற்பனை பேரம் பேசப்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரத்திற்குள் அனைத்துஏரியாக்களும் விற்றுத் தீர்ந்து விட்டன. தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, வெளிநாட்டு வினியோகம் எனஅனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.இதனால் கையில் ஏகப்பட்ட கோடிகளுடன் (ரூ. 50 கோடி முதல் 70 கோடி வரை குவிந்துள்ளதாக சொல்கிறார்கள்)படப்பிடிப்பைத் தொடங்க தயார் நிலையில் உள்ளது ஏவி.எம்.படத்தின் பூஜை கூட போடப்படுவதற்கு முன் இந்தப் படத்தின் வினியோக உரிமை விற்றுத் தீர்ந்திருப்பது தமிழ் சினிமாவில்இதுவே முதல் முறையாம். மேலும் ரூ. 70 கோடி அளவுக்கு ஒரு படம் விற்றிருப்பது இந்திய சினிமா வரலாற்றிலேயே இது தான்முதல் முறையாகும்.சந்திரமுகி படத்தில் ரூ. 15 கோடி சம்பளமாக வாங்கிய ரஜினிக்கு படத்தின் வினியோக உரிமை மூலம் ரூ. 50 கோடி லாபம்கிடைத்தாக சொல்கிறார்கள். இந்தப் படத்தில் ஏவி.எம்மும் ரஜினியும் லாபத்தில் பிப்டி-பிப்டியை பகிர்ந்து கொள்ளப்போகிறார்களாம். இதனால் படம் ஓடுவதைப் பொறுத்து இதிலும் ரஜினிக்கு பெரும் லாபம் கிடைக்கலாம்.

    By Staff
    |

    ஏவி.எம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கும், ரஜினிகாந்த் தனது புதிய படத்துக்காகதிருப்பதிக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

    புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு முன் திருப்பதிக்குச் சென்று சாமி கும்பிடுவது ரஜினியின் வழக்கம். அதேபோல படப்பிடிப்புமுடிந்ததும் திருப்பதிக்கு சென்று வருவார்.

    தற்போது ரஜினியின் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஷங்கரின் இயக்கத்தில் சிவாஜி என்ற படத்தில்நடிக்கவுள்ளார். சந்திரமுகி படத்தின் வெற்றி விழாவின்போது இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகப் போகிறது.

    இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இதற்கானமுயற்சிகளையும் பேச்சுவார்த்தையையும் ஷங்கர் தொடங்கியுள்ளார்.


    புதிய படத்திற்கான கதைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ள ஷங்கர், படத்தை மிகப் பிரமாண்டமாகஎடுக்கத் திட்டமிட்டுள்ளார். ரஜினியின் படங்களிலேயே மிகக் காஸ்ட்லியானதாகவும் பிரமாண்டமானதாகவும் இதுஇருக்குமாம்.

    இதனால் பிரமாண்ட நடிகை ஒருவரைப் போட்டால்தான் சரி வரும் என்று அபிப்பிராயப்படும் ஷங்கர், அதற்கு ஐஸ்வர்யாராயை தேர்வு செய்துள்ளார். இதற்கு ரஜினியும் ஓ.கே. சொல்லிவிட்டாராம்.


    தான் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா நடித்ததால் அவருடன் நல்ல பரிச்சயமான ஷங்கர், அவரது கால்ஷீட் பெறும்முயற்சியில் இருக்கிறார். தொடர்ந்து பல இயக்குனர்கள் நச்சரித்தும் தமிழ் பக்கம் கொஞ்ச காலமாக எட்டிப் பார்க்காமல் இருந்தஐஸ்வர்யா ராய்க்கு, இப்போது இந்தியில் பெரிய மார்க்கெட் ஏதும் இல்லை.

    கூப்பிடுவது ஷங்கர் என்ற பிரமாண்ட இயக்குனர் என்பதால் ஐஸ்வர்யா இம்முறை ஒப்புக் கொள்வார் என்றே தெரிகிறது.பாபாவில் நடிக்க அவர் மறுத்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மனீஷாவப்ை போட்டார்கள்.

    சந்திரமுகி படத்திற்காகவும் ஐஸ்வர்யாராயைத்தான் முதலில் அணுகினார்கள் (ஜோதிகா வேடத்தில் நடிக்க) என்பதும்குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் கிடைக்காததால், சிம்ரனைப் புக் செய்தார்கள். கடைசியில் அவரும் ஜகா வாங்கவே,ஜோதிகாவை வைத்துப் படத்தை முடித்தார்கள்.

    இம் முறை ரஜினி, ஐஸ்வர்யா, ஷங்கர் இணைந்தால் தமிழ் சினிமா வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகவும் செலவு பிடிக்கும்படமாக இது இருக்கும் என்கிறார்கள்.

    காரணம், ரஜினி, ஷங்கர், ஐஸ்வர்யா ராய் ஆகிய 3 பேரின் சம்பளம் மட்டுமே ரூ. 25 கோடிகளைத் தாண்டிவிடும் என்பது தான்.


    ரஜினிக்கு சம்பளம் என்று ரூ. 15 கோடியைத் தந்துள்ளது ஏவி.எம். ஷங்கர் இப்போது ரூ. 5 கோடி வரை (வெளியில் தெரிய)சம்பளமாக வாங்குகிறார். புதுப் படத்துக்கு ரூ. 10 கோடி கேட்டுள்ளார் என்கிறார்கள். ஐஸ்வர்யா ராயின் சம்பளம் ரூ. 5 கோடியில்உள்ளது.

    இந்த சம்பளங்களுடன், படத் தயாரிப்புக்கும் சேர்த்து இதை எடுத்து முடிக்க ஏவி.எம் ரூ. 40 கோடிக்கு பட்ஜெட்போட்டுள்ளதாம்.

    ஆனால், படத்தை வாங்க வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் போட்டி போட்டுக் கொண்டு அட்வான்ஸ் பணத்தைக்கொண்டு வந்து கொட்டிவிட்டதால் தைரியமாகக் களமிறங்கத் தயாராகிவிட்டது ஏவி.எம்.

    இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியான பிற்பகல் முதலே ஏகப்பட்ட வினியோகஸ்தர்கள், சாலிகிராமத்தில் உள்ள ஏவி.எம்.ஸ்டுடியோவில் குவியத் தொடங்கிவிட்டனர். ஏரியா உரிமையைப் பெற எவ்வளவு பெரிய பணத்தையும் அள்ளித் தர அவர்கள்தயாராக உள்ளனர். இதனால் சனிக்கிழமை மாலை 4 மணிக்கே ஏரியா விற்பனையைத் தொடங்கிவிட்டது ஏவி.எம்.


    கிட்டத்தட்ட ஏலம் விடுவது மாதிரி ஏரியா விற்பனை பேரம் பேசப்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரத்திற்குள் அனைத்துஏரியாக்களும் விற்றுத் தீர்ந்து விட்டன. தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, வெளிநாட்டு வினியோகம் எனஅனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் கையில் ஏகப்பட்ட கோடிகளுடன் (ரூ. 50 கோடி முதல் 70 கோடி வரை குவிந்துள்ளதாக சொல்கிறார்கள்)படப்பிடிப்பைத் தொடங்க தயார் நிலையில் உள்ளது ஏவி.எம்.

    படத்தின் பூஜை கூட போடப்படுவதற்கு முன் இந்தப் படத்தின் வினியோக உரிமை விற்றுத் தீர்ந்திருப்பது தமிழ் சினிமாவில்இதுவே முதல் முறையாம். மேலும் ரூ. 70 கோடி அளவுக்கு ஒரு படம் விற்றிருப்பது இந்திய சினிமா வரலாற்றிலேயே இது தான்முதல் முறையாகும்.

    சந்திரமுகி படத்தில் ரூ. 15 கோடி சம்பளமாக வாங்கிய ரஜினிக்கு படத்தின் வினியோக உரிமை மூலம் ரூ. 50 கோடி லாபம்கிடைத்தாக சொல்கிறார்கள். இந்தப் படத்தில் ஏவி.எம்மும் ரஜினியும் லாபத்தில் பிப்டி-பிப்டியை பகிர்ந்து கொள்ளப்போகிறார்களாம். இதனால் படம் ஓடுவதைப் பொறுத்து இதிலும் ரஜினிக்கு பெரும் லாபம் கிடைக்கலாம்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X