twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐஸ்வர்யா ராய்: காத்திருக்கும் ரஜினி விழாவில் ரஜினியுடன் பிரபு, வாசு, தாசரி, ராம்குமார்

    By Staff
    |
    விழாவில் ரஜினியுடன் பிரபு, வாசு, தாசரி, ராம்குமார்

    சிவாஜி படத்தில் தனக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க முயற்சித்து வருவதாக ரஜினிகாந்த் கூறினார்.

    சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த சந்திரமுகி படத்தின் 200 நாள் விழா சென்னையில் நடந்தது. பல்கலைக்கழக நூற்றாண்டு விழாமண்டபத்தில் நடந்த விழாவில் ரஜினி பேசியதாவது:

    நான் படையப்பா என்ற படத்தை தயாரிக்காமல் இருந்திருந்தால் சிவாஜி என்ற மாபெரும் மனிதரைப் பற்றி அறியாமல்போயிருப்பேன்.

    படையப்பா சூட்டிங்கின்போது அவர் முன் நான் ஒரு துணை நடிகர் மாதிரி உட்கார்ந்திருப்பேன். 20 நாட்கள் மைசூரில் சூட்டிங்நடந்தபோது அவர் என்னிடம் குடும்பம், அரசியல், சினிமா என பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்.

    சில விஷயங்களை வெளியில் சொல்லக் கூடாது என்று கூறிவிட்டதால், அதையெல்லாம் மனதில் போட்டு புதைத்துவிட்டேன். ஒருநாள் திடீரென, நான் இறந்தால் என் உடலுடன் நீ வருவாயா என்று கேட்டார். நிச்சயம் வருவேன் என்றேன்.

    விழாவில் ரஜினி குடும்பம்

    என் அப்பாவின் உடம்புக்குப் பின்னால் கூட நான் போனதில்லை. சிவாஜி சாரின் உடலுடன் சுடுகாடு வரை போனேன். அவர்ஆத்மா நம்முடனே இருக்கிறது. அவரது குடும்பத்துடனும் பிள்ளைகளுடனும் வாழ்நாள் முழுக்க இருக்க ஆசைப்படுகிறேன்.

    சந்திரமுகி படத்தை ஆரம்பித்ததும் முதலில் வடிவேலின் கால்ஷீட்டை வாங்கச் சொன்னேன். அப்புறம் ஐஸ்வர்யா ராய்கால்ஷீட்டுக்கு முயற்சி செய்தோம். என் ஒவ்வொரு படத்திலும் ஐஸ்வர்யா ராய் பேசப்படுவார். ஐஸ்வர்யா என்றால் அவ்வளவுஇஷ்டமா என்று நீங்கள் கேட்கலாம்.

    அப்படியெல்லாம் இல்லை. படையப்பாவில் நீலாம்பரி வேடத்துக்கு ஐஸ்வர்யா பொருத்தமாக இருப்பார் என்று கருதினோம்.அப்புறம் பாபா படத்தில் நடிக்கக் கேட்டோம். ஆனால், இரண்டு முறையும் கால்ஷீட் இல்லை.

    இப்போது சிவாஜி படத்துக்காக கேட்டிருக்கிறோம். கிடைத்தால் நல்லது.

    சந்திரமுகியில் ஜோதிகாவை நடிக்க வைத்தபோது எனக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை. ஜோதிகாவை நான் சீரியசாகபார்த்ததில்லை. ஆனால், வாசு தான் நம்பிக்கையோடு இருந்தார்.

    நிகழ்ச்சியில் நடனமாடிய நயனதாரா

    முதல் நாள் அந்த கொலுசு சீன் எடுத்தோம். எனக்கா.. எனக்கா தெரியாது என்று ஜோதிகா கேட்கிற காட்சி அது. அதில்ஜோதிகாவின் நடிப்பையும் கண்களையும் பார்த்து பிரமித்துப் போய் விட்டேன். அப்போதே வாசுவிடம் இது வெள்ளி விழாவெற்றி காணும் படம் என்று உறுதியாக சொன்னேன்.

    இந்தப் படத்தை ஓட வைத்தது மக்கள். என்னை மீண்டும் எழுந்து நிற்க வைத்தது பாபாஜி சச்சிதானந்த சுவாமிகள்.

    பாபா படம் ஓடாததற்காக கவலைப்பட வேண்டியது நான் அல்ல. கவலைப்பட வேண்டியது பாபாஜி தான். நல்லவர்களுக்குஆண்டவன் உடனடியாகக் கொடுக்க மாட்டான். முதலில் சோதனைகள் வரும். பின்னால் சாதனைகள் வரும் என்றார்.

    தென் ஆப்பிரிக்காவில் 100 நாள்:

    முன்னதாகப் பேசிய மத்திய அமைச்சரும் தெலுங்குப் படத் தயாரிப்பாளருமான தாசரி நாராயண ராவ்,

    இந்திய சினிமாவிலேயே நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் ரஜினி தான். சம்பள விஷயத்திலும் அவப் தான் நம்பர் ஒன். சந்திரமுகி படம்தென் ஆப்பிரிக்காவில் நூறு நாட்கள் ஓடியிருக்கிறது. இதை நான் கற்பனையாவது செய்து பார்த்திருப்போமா?

    வழக்கமாக நடிகர்கள் வருடத்துக்கு 3,4 படம் நடிப்பார்கள். ஆனால், 3,4 வருடம் விட்டு ஒரு படத்தில் நடித்து அதையும் சூப்பர்ஹிட் ஆக்கித் தருபவர் ரஜினி மட்டுமே. இதிலும் அவர் ஒரு சூப்பர் ஸ்டார் தான்.

    ஆளுயர மாலையுடன் ரஜினி

    இந்தியாவிலேயே அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் இவர் தான். தான் ஓய்வு பெறப் போவதாக ரஜினி கூறி வருகிறார்.அவர் ஓய்வு பெறவே முடியாது. ஓய்வு பெறுவது அவரது கையில் இல்லை என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குனர் வாசு, நயனதாரா, பிரபு, அவரது அண்ணன் ராம்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த சந்திரமுகி வெற்றி விழா நிகழ்ச்சியை முதலில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்தத் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால்,10,000 பேர் வரை கூடி ரஜினிக்கு ஆதரவாக கோஷம் போடுவார்கள் என்பதால் அதை விரும்பாத அதிமுக தலைமை அந்தஇடத்தைத் தரவில்லையாம்.

    இதையடுத்தே சிறிய இடமான சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்துக்கு விழாவை மாற்றினார்களாம்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X