ஹீரோ .. ஹீரோ ..

By Staff

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 53வது பிறந்தநாளை வழக்கம்போலவே இந்த ஆண்டும் வெளியூரிலேயேகொண்டாடி விட்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் உள்ள தனது இல்லத்திலேயே அவர் தன் பிறந்தநாளைக்கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தமிழகம் முழுவதிலுமிருந்து சென்னை வந்திருந்த ஏராளமான ரசிகர்களும் ரஜினி வீட்டின் முன் திரண்டிருந்தனர்.

ஆனால் வழக்கம்போலவே இந்த ஆண்டும் சென்னையிலிருந்து எஸ்கேப் ஆன ரஜினி, அங்கேயே பிறந்தநாளைக்கொண்டாடியதாகத் தெரிகிறது.

திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் சென்னை மேயர் ஸ்டாலின் ஆகியோர் மும்பைக்கு தொலைபேசி செய்துரஜினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அவர்களுக்கு ரஜினி நன்றி கூறினார்.

தமிழக அரசியலில் சமீப காலத்தில் பல பெரும் பரபரப்புகளை ஏற்படுத்திய ரஜினி தன்னுடைய அரசியல்பிரவேசம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் தன் பிறந்தநாளன்று வெளியிடுவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. அவருடைய ரசிகர்களும் படபடப்புடனும் ஆவலுடனும் காத்திருந்தனர்.

ஆனால் அதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஒரு வாரம் கழித்துதான் மும்பையிலிருந்து ரஜினிசென்னை திரும்புவார் என்று தெரிகிறது. அப்போதாவது ஏதாவது அறிவிப்பு வெளியிடுவாரா என்று ரசிகர்கள்எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

போயஸ் கார்டனில்தான் முதல்வர் ஜெயலலிதாவின் வீடும் இருப்பதால் அப்பகுதியில் கூட்டம் சேர்ந்து விடக்கூடாது என்பதில் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா தீவிரமாக இருந்தார்.

ஆனால் அதையும் மீறி போயஸ் கார்டனில் ரஜினி ரசிகர்கள் குவிந்து விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

திருவல்லிக்கேணி, தி. நகர், திருவான்மியூர் ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கோவில்களில் ரஜினிக்காகசிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X