ஹீரோ .. ஹீரோ ..

By Staff

ரஜினியின் அடுத்த படம் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

படத்தை இயக்கப் போவது கே.எஸ். ரவிக்குமார் என்பதும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. இப்போது சரத்குமாரைவைத்து பாறை படத்தை இயக்கி வரும் ரவிக்குமார் அதை முடித்துவிட்டு ரஜினி படத்தில் இறஙகுவாராம்.

படம் கிட்டத்தட்ட படையப்பா ஸ்டைலில் தான் இருக்கும் என்கிறார்கள். படத்தின் கதையை தயார் செய்ததுரவிக்குமார் தானாம். இப்போது ரஜினியின் நெருக்கமான வட்டாரம் கதையை அலசி வருகிறது.

வேண்டிய மாற்றஙகள் முடிந்தவுடன் படத் தயாரிப்பு தொடங்கும். படத்தை வழக்கம்போல் ரஜினியே சொந்தசெலவில் எடுக்கிறார். இசை பெரும்பாலும் பரத்வாஜ் ஆக இருக்கலாம்.

படம் காமெடி பிளஸ் ஆக்ஷனாக இருக்க வேண்டும் என ரஜினி விரும்புகிறாராம்.

அரசியல் தொடர்பாக ஒரு வார்த்தைகூட படத்தில் வராதாம். பத்து ஆண்டுகளுக்கு முன் காமெடியில்மக்களைக் கவர்ந்த ரஜினியை மீண்டும் இந்தப் படத்தில் பார்க்கலாமாம்.

ஹீரோயின் குறித்து இன்னும்முடிவாகவில்லை. இருப்பினும் மீனா எப்படியாவது படத்தில் இடம்பிடித்துவிட பெரும் முயற்சி செய்து வருவதாகத் தகவல். கிரண் மீது ரஜினிக்கு ஒரு கண் இருப்பதாகசொல்கிறார்கள்.

படத்தில் இன்னொரு முக்கியமான விஷயம். கமல்ஹாசனும் தலைகாட்டலாம் என்கிறார்கள்.ஆனால், அவரது ரோல் என்ன, எப்படி என்று தெரியவில்லை. சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்.அதேபோல ரகுவரனுக்கும்முக்கியமான ஒரு ரோல் கொடுக்கப் போகிறாராம் ரஜினி.

பாபாவை பின்பற்றும் விஜய்

இதற்கிடையே விஜய்- மீரா ஜாஸ்மீனை வைத்து உருவாக்கப்பட்டு வரும் கீதை படம் கிட்டத்தட்ட பாபா படத்தை ஒட்டியேஇருப்பதாக சூட்டிங் ஸ்பாட் ஆசாமிகள் கூறுகின்றனர்.

இந்தப் படத்தில் விஜய்க்குப் பெயர் சாரதி. இளம் வயதிலேயே தத்துவத்தாரமாக வாழும் ஒரு வாலிபனின் கதையாம்.அவ்வப்போது பகவத் கீதையில் இருந்து வசனங்களைச் சொல்வது, நடக்கப் போவதை முன்பே கூறுவது என விஜய் மாயமந்திரங்கள்செய்கிறாராம்.

கையில் 6 விரல்களுடன் பிறந்த இந்தக் குழந்தை ரொம்ப வித்தியாசமானவனாக இருப்பான், இவன் ஒரு ஸ்பெஷல் குழந்தை, இவன்27 வயதுக்கு மேல் இருக்க மாட்டான், பல அற்புதங்கள் புரிவான் என்பது போன்ற ஜோசியர்கள் பேசும் (பாபா ஸ்டைலில்...)வசனங்களும் இதில் உள்ளனவாம்.

அந்த பாபா தான் விஜய்யை காப்பாத்தனும் !!

விபச்சாரம்- ஸ்வேதாவால் பிரச்சனை

கீதை படத்தில் விஜய்யின் சகோதரியாக டிவி நடிகை ஸ்வேதா நடித்து வருகிறார். இவர் தான் சமீபத்தில்விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டவர். இதனால் விஜய் அப்செட் ஆகிவிட்டதாகத் தகவல்.

இனி தனது படங்களில் டிவி நடிகைகளை சேர்க்கவே கூடாது என்று புது கண்டிசன் போடப் போகிறாராம். மேலும்தனது படங்ளில் முக்கிய கேரக்டர்களில் வரும் துணை நடிகைகளை தானே செலக்ட் செய்யவும் முடிவுசெய்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X