»   »  ரஜினி: போட்டி போடும் தயாரிப்பாளர்கள்

ரஜினி: போட்டி போடும் தயாரிப்பாளர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதிய படம் குறித்து ஆலோசிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் பெங்களூர் சென்றுள்ளார்.

கன்னடத்தில் வெளியான பி.வாசுவின் ஆப்தமித்ராவை பெங்களூரில் பிரண்ட்ஸோடு சென்று தியேட்டரில் பார்த்துவிட்டுத் தான் சந்திரமுகியை உருவாக்க முடிவுசெய்தார் ரஜினி.

சந்திரமுகி கன்னாபின்னாவென வெற்றியடைந்துவிட்ட நிலையில், அப்படியே தனது பேவரிட்டான இமயமலை பக்கமாக மலையேறினார். சில வாரங்களுக்கு முன்திரும்பி வந்தவர், அடுத்த படத்துக்கான ஏற்பாடுகளில் விறுவிறுவென இறங்கிவிட்டார்.

பாபா படுதோல்விக்குப் பிறகு ரொம்பவே ஆடிப் போய் இருந்த ரஜினிக்கு சந்திரமுகி மூலம் பெரிய பிரேக் கொடுத்ததால் அதற்கு நன்றிக் கடனாக மீண்டும் வாசுவைவைத்தே தனது அடுத்த படத்தையும் எடுக்கலாமா என சூப்பர் ஸ்டார் தரப்பில் யோசிக்கப்படுவதாகத் தெரிகிறது.

(சந்திரமுகி பிளாப் ஆகியிருந்தால் தனது கலைப்பயணத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முடிவில் இருந்தாராம் ரஜினி)

இப்போது சந்திரமுகியை இந்தியில் எடுக்க முடிவு செய்துள்ள வாசு, அதில் ரஜினி கேரக்டரில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க உள்ளார். இது தொடர்பானபேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அந்தப் படம் முடிந்த பிறகோ அல்லது அதற்கு முன்னதாகவோ வாசுவை வைத்தே தனது அடுத்த படத்தை எடுக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

இந் நிலையில் தான் மீண்டும் ரஜினி பெங்களூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களான நடிகர்கள் அம்பரீஷ், துவாரகீஷ் உள்ளிட்டோருடன் தனதுஅடுத்த படத்துக்கான கதை குறித்து அவர் ஆலோசிக்கவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கதை ரெடியானால் வாசுவைக் கூப்பிட்டே படத்தை இயக்கச் சொல்வாராம்.

அதே நேரத்தில் ஜக்குபாயை பாதியில் விட்டதால் தன் மீது கடுப்பில் இருக்கும் தனது நண்பரான கே.எஸ்.ரவிக்குமாருக்கும் ஒரு படம் பண்ணும் மூடில் ரஜினிஇருக்கிறாராம்.

படத்தை இயக்குவது யார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதைத் தயாரிப்பது யார் என்பதில் கடும் போட்டா போட்டி நிலவுகிறது. இப்போதைக்கு சொந்த பேனரில்படம் எடுப்பதில்லை என்ற முடிவில் இருக்கும் ரஜினியை தங்களது பேனரில் நடிக்க வைக்க ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகன், பஞ்சு அருணாச்சலம்,ஆர்.எம்.வீரப்பன், ஏவிஎம் நிறுவனம் ஆகியோர் தீவிரமாக முயன்று வருகின்றனர்.


இதில் ரஜினிக்கு மாபெரும் வெற்றி தந்த பாட்சாவை தயாரித்தது வீரப்பன் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல ரஜினியின் ஆரம்ப காலத்தில் கை கொடுத்தநிறுவனங்களில் ஒன்று ஏவிஎம். இப்போது இந்த நிறுவனம் சகோதரர்களுக்குள் பாகப் பிரிவினையாகி கொஞ்சம் பணத் தட்டுப்பாட்டில் தான் உள்ளது.

இதனால் சிவாஜி குடும்பத்துக்கு ஒரு சந்திரமுகி மூலம் ரூ. 25 கோடிகளை ஈட்டித் தந்த ரஜினி, தங்களையும் கவனிப்பார் என்று நினைக்கிறது அந்த நிறுவனம்.

அதே போல பஞ்சு அருணாச்சலமும் ரஜினியின் உதவியை எதிர்பார்த்திருக்கிறார்.

நல்ல கதையோடு போனால் ரஜினியை வளைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் நல்ல கதையைத் தேடும் வேலையில் பஞ்சு, ஏவிஎம், ஆர்.எம்.வீ ஆகியோர்தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர்.

ஆனால், ரஜினி தரப்பில் இருந்து தங்களுக்கு ஏற்கனவே படம் தயாரிக்க தயாராக இருக்குமாறு தகவல் வந்துவிட்டதாக எடிட்டர் மோகன் தரப்பு கூறுகிறது. இதனால்,ரஜினிக்குரிய கதையைத் தயார் செய்யும் வேலையில் அவரது படத் தயாரிப்பு நிறுவனம் பரபரப்பாக உள்ளது.

ரஜினி மட்டும் ஓ.கே. சொல்லிவிட்டால் படத்தை விடுவிடுவென முடித்து தீபாவளிக்கே ரிலீஸ் செய்யத் தயாராக உள்ளராம் எடிட்டர் மோகன்.

28ம் தேதி மீண்டும் சென்னைக்கு வரும் ரஜினிகாந்த், தனது புதிய படம் குறித்து அறிவிப்பார் என்று தெரிகிறது.

இதற்கிடையே ரஜினியின் இளைய மகளான செளந்தர்யாவை ஹீரோயினாக்க கோலிவுட்டில் பெரும் முயற்சி நடக்கிறது. தனுஷைக் கைப்பிடித்த ஐஸ்வர்யாவுக்குஇளையவரான செளந்தர்யாவை ஹீரோயினாக நடிக்க வைக்க லட்சுமி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

தில் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் இது. காக்க காக்க படத்தை இயக்கிய கெளதம் மேனன் இப்போது கமலை வைத்து வேட்டையாடுவிளையாடு படத்தை இயக்கி வருகிறார். அதை முடித்துவிட்டு லட்சுமி புரொடக்ஷன்சுக்கு ஒரு படத்தை டைரக்ட் செய்யவுள்ளார்.

அதில் தான் செளந்தர்யாவை நடிக்க வைக்க லதா ரஜினி மூலம் பேசப்பட்டதாம். ஆனால், ரஜினிக்கு அதில் சுத்தமாக விருப்பமில்லை என்கிறார்கள்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil