ரஜினியின் அடுத்த தயாரிப்பாளர், இயக்குனர் ரெடி! ரஜினியின் அடுத்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் யார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது தெலுங்குப் படத் தயாரிப்பாளர் பூர்ணசந்திர ராவ். இயக்கப் போவது மீண்டும்பி.வாசு.பூர்ண சந்திரராவ், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 70 படங்கள் வரை தயாரித்துள்ளார். ரஜினியை வைத்து இதற்குமுன்பு நான் சிகப்பு மனிதன், அதிசயப் பிறவி ஆகிய இரு படங்களைத் தயாரித்துள்ளார். ரஜினியின் முதல் இந்திப் படமான அந்தாகானூன் படத்தை தயாரித்தவரும் இவரே. அந்தப் படத்தை யாரும் வாங்கமுன்வராத நிலையில் சொந்தமாக திரையிட்டு நல்ல லாபம் பார்த்தார். அந்தப் படத்தில் ரஜினியின் சம்பளம் எவ்வளவுதெரியுமா? அதிகமில்லை ஜென்டில்மேன், ஜஸ்ட் 7 லட்சம் தான்!பூர்ணசந்திரராவுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. அஜீத்தை முதன் முதலில் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குப் படம்மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும் ராவ் தான். இப்படியாக ஒரு காலத்தில் தயாரிப்பில் கோலோச்சி வந்த பூர்ணசந்திரராவ் இப்போது நல்ல நிலையில் இல்லையாம். தொடர்ந்துஅவரது சில தெலுங்குப் படங்கள் நஷ்டத்தைக் கண்டதால் மனிதர் நொடித்துப் போயுள்ளாராம்.இந்தத் தகவல் ரஜினியின் காதுகளுக்கும் போயுள்ளது. உடனே ஓலை அனுப்பி ராவை வரவழைத்து நீண்ட நேரம் பேசியுள்ளார்.இந்த சந்திப்பு சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. இந் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் ராவை அழைத்து பேசியுள்ளாராம் ரஜினி. இந்த சந்திப்பின் போதுராவுக்காக ஒரு படம் செய்து தருவது குறித்து ரஜினி உறுதி கூறியதாக தெரிகிறது.ஸோ, ரஜினியின் அடுத்த படம் ராவுக்குத் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. படத்தை இயக்கப் போவது பி.வாசுஎன்பதும் உறுதியாக கூறப்படுகிறது. ஒரு வேளை அவருக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் தூள், கில்லி என தூள் பரப்பி வரும்தரணிக்கு வாய்ப்பு கிடைக்குமாம்.சந்திரமுகியைப் போலவே ரஜினியின் புதிய படம் ரீமேக் படமாகத் தான் இருக்குமாம். சந்திரமுகியில் கிடைத்தவெற்றியையும், இழந்த செல்வாக்கையும் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில், ரீமேக் படத்தில் நடிக்க ரஜினி முடிவுசெய்துள்ளாராம். சே ஃப் கேம்!அப்ப, ஜெயம் ரவியின் அப்பா தயாரிக்க, அண்ணன் இயக்க அதில் ரஜினி நடிக்கப் போவதாக கூறப்பட்ட தகவல்? அது ஜெயம்கம்பெனியாரே கிளப்பி விட்ட புருடாவாம்!ரஜினி ரசிகர்கள் அடுத்த விருந்துக்கு ஆயத்தமாகலாம்!

By Staff

ரஜினியின் அடுத்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் யார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது தெலுங்குப் படத் தயாரிப்பாளர் பூர்ணசந்திர ராவ். இயக்கப் போவது மீண்டும்பி.வாசு.

பூர்ண சந்திரராவ், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 70 படங்கள் வரை தயாரித்துள்ளார். ரஜினியை வைத்து இதற்குமுன்பு நான் சிகப்பு மனிதன், அதிசயப் பிறவி ஆகிய இரு படங்களைத் தயாரித்துள்ளார்.

ரஜினியின் முதல் இந்திப் படமான அந்தாகானூன் படத்தை தயாரித்தவரும் இவரே. அந்தப் படத்தை யாரும் வாங்கமுன்வராத நிலையில் சொந்தமாக திரையிட்டு நல்ல லாபம் பார்த்தார். அந்தப் படத்தில் ரஜினியின் சம்பளம் எவ்வளவுதெரியுமா? அதிகமில்லை ஜென்டில்மேன், ஜஸ்ட் 7 லட்சம் தான்!

பூர்ணசந்திரராவுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. அஜீத்தை முதன் முதலில் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குப் படம்மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும் ராவ் தான்.

இப்படியாக ஒரு காலத்தில் தயாரிப்பில் கோலோச்சி வந்த பூர்ணசந்திரராவ் இப்போது நல்ல நிலையில் இல்லையாம். தொடர்ந்துஅவரது சில தெலுங்குப் படங்கள் நஷ்டத்தைக் கண்டதால் மனிதர் நொடித்துப் போயுள்ளாராம்.

இந்தத் தகவல் ரஜினியின் காதுகளுக்கும் போயுள்ளது. உடனே ஓலை அனுப்பி ராவை வரவழைத்து நீண்ட நேரம் பேசியுள்ளார்.இந்த சந்திப்பு சில வாரங்களுக்கு முன்பு நடந்தது.

இந் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் ராவை அழைத்து பேசியுள்ளாராம் ரஜினி. இந்த சந்திப்பின் போதுராவுக்காக ஒரு படம் செய்து தருவது குறித்து ரஜினி உறுதி கூறியதாக தெரிகிறது.

ஸோ, ரஜினியின் அடுத்த படம் ராவுக்குத் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. படத்தை இயக்கப் போவது பி.வாசுஎன்பதும் உறுதியாக கூறப்படுகிறது. ஒரு வேளை அவருக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் தூள், கில்லி என தூள் பரப்பி வரும்தரணிக்கு வாய்ப்பு கிடைக்குமாம்.

சந்திரமுகியைப் போலவே ரஜினியின் புதிய படம் ரீமேக் படமாகத் தான் இருக்குமாம். சந்திரமுகியில் கிடைத்தவெற்றியையும், இழந்த செல்வாக்கையும் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில், ரீமேக் படத்தில் நடிக்க ரஜினி முடிவுசெய்துள்ளாராம். சே ஃப் கேம்!

அப்ப, ஜெயம் ரவியின் அப்பா தயாரிக்க, அண்ணன் இயக்க அதில் ரஜினி நடிக்கப் போவதாக கூறப்பட்ட தகவல்? அது ஜெயம்கம்பெனியாரே கிளப்பி விட்ட புருடாவாம்!

ரஜினி ரசிகர்கள் அடுத்த விருந்துக்கு ஆயத்தமாகலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X