Rajinikanth 75 - கமலால் ரஜினிக்கு வந்த சங்கடம்.. முதல் படத்திலேயே அப்படியா?.. தலைவர் பாவம்
சென்னை: ரஜினிகாந்த் என்றாலே அனைத்து தலைமுறையினருக்கும் பிடிக்கும். 74 வயதாகும் அவர் இன்னும் சில நாட்களில் தனது 75ஆவது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். இப்போதும் படு பிஸியாக நடித்துவரும் அவர் அடுத்ததாக கமலின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
'சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்' என்று ரஜினியின் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரி எப்போதுமே உண்மைதான். ரஜினிக்கென்று பெரிய அறிமுகமே தேவையில்லை. அவர்தான் கோலிவுட்டின் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார். அவரை சாமானியர்கள் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட திரைத்துறையை சேர்ந்த நடிகர்களும் அவ்வளவு ரசித்துவருகிறார்கள். இப்படி ஒரு நிலைமை வேறு எந்த நடிகருக்கும் இந்தியாவில் கிடையாது என்பதுதான் உண்மை.
என்ன காரணம்?: ரஜினியின் இந்த வெற்றிக்கு அவரது திறமையும், ஸ்டைலும்தான் காரணம் என்று பலரும் சொல்வார்கள். அதுவும் உண்மைதான். ஆனால் அது மட்டுமே காரணம் கிடையாது. 74 வயதாகும் அவர் இப்போதும் இள ஹீரோக்களுக்கு போட்டியாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் அனைவராலும் ரசிக்கப்படுவதற்கு காரணமே தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் தன்னுடைய முதல் படம்போல் நினைப்பதுதான்.

தெளிவான ரஜினி: அதேபோல் தன்னுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்பதை ஒரு கலைஞர் எப்போதும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்தவர்கள் எடை போடுவதற்கு முன்பு தன்னைத்தானே எடை போட்டு சுதாரிப்பாக இருக்க முடியும். ரஜினி அந்த வகையை சேர்ந்தவர். கமல்ஹாசன் தேர்ந்தெடுத்த பாதையை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அதற்காக பலரும் அவரை கொஞ்சம் ஒரு மாதிரியாகத்தான் பேசினார்கள். ஆனால் அதையெல்லாம் கேட்டு குழம்பிப்போகாமல் தன்னுடைய பலத்தை மேற்கொண்டு வளர்க்கும் செயலில் இறங்கினார்.
விரைவில் பிறந்தநாள்: அதன் காரணமாகத்தான் இத்தனை வருடங்களாக யாராலும் அவர் அமர்ந்திருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் நாற்காலியை அசைத்துகூட பார்க்க முடியவில்லை. ஜெயிலர் 2 படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். சூழல் இப்படி இருக்க வரும் டிசம்பர் 12ஆம் தேதி அவருக்கு 75ஆவது பிறந்தநாள். அதுமட்டுமின்றி இந்த வருடத்தோடு அவர் திரைத்துறையில் 50ஆவது வருடத்தையும் நிறைவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் படத்தில் வந்த சங்கடம்: இந்நிலையில் அவர் வாழ்வில் நடந்த சம்பவம் குறித்து பார்க்கலாம். அதாவது அவர் அறிமுகமான முதல் படம் அபூர்வ ராகங்கள். அதில் அவருடன் கமல்ஹாசனும் முக்கியமான ரோலை நடித்திருந்தார். அப்படத்தில் வீட்டு கேட்டை திறந்து உள்ளே வருவதுதான் அவருக்கு எடுத்த முதல் ஷாட். அதை சிங்கிள் டேக்கில் செய்துவிட்டார். அடுத்ததாக அவரை கமல்ஹாசன் ஓடி வந்து அணைத்து பேசும் காட்சி.
அந்தக் காட்சி எடுக்கும்போது எதிரில் கமல் இருந்ததால்; 'கமல் எவ்வளவு பெரிய ஸ்டார். அவருக்கு முன்பு நாமும் நடிக்கிறோமே' என்று பதற்றப்பட்டுவிட்டாராம் சூப்பர் ஸ்டார். இதனால் நடிப்பிலும் சொதப்ப; அந்த சீன் மட்டும் ஏழு முதல் எட்டு டேக்குகள் வரை போனதாம். பிறகு எப்படியோ சமாளித்து நடித்தாராம். கமலை பார்த்து அப்போது பதற்றப்பட்ட ரஜினிதான் பின் நாட்களில் கமலையே ஓவர் டேக் செய்துவிட்டார். அதுதான் தலைவர் செய்த தரமான சம்பவம்.


Click it and Unblock the Notifications











