Rajini - குசேலன் கொடுத்த பாடம்.. லால் சலாமில் ஐஸ்வர்யாவுக்கு ரஜினி செய்த அட்வைஸ் இதுவா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் அவர் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். முன்னணி கதாபாத்திரங்களில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. படமானது பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் ஐஸ்வர்யாவுக்கு ரஜினி அட்வைஸ் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா அடுத்ததாக வை ராஜா வை படத்தை இயக்கினார். இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. இதனையடுத்து எந்தப் படமும் இயக்காமல் இருந்தார். சூழல் இப்படி இருக்க திடீரென தனுஷுடனான திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. இதனால் அவர் கொஞ்சம் அப்செட்டாகவே காணப்பட்டதாக கூறப்பட்டது. இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்த அவர் படம் இயக்க முடிவு செய்தார். அதன்படி லால் சலாம் திரைப்படத்தை ஆரம்பித்தார்.

லால் சலாம்: லைகா நிறுவனம் தயாரிக்க விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க கமிட்டாகினர். இவர்கள் தவிர செந்தில், தன்யா பாலகிருஷ்ணா, தம்பி ராமையா உள்ளிட்டோரும் கமிட்டாகினர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்க ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடிக்க கமிட்டானார். ரஜினிகாந்த் படத்துக்குள் வந்ததும் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிற தொடங்கியது.
மொய்தீன் பாய்: படத்தில் அவர் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரது ஃபர்ஸ்ட் லுக் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டாலும் அடுத்ததாக வெளியான அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகளும், படத்தின் ட்ரெய்லரில் அவருக்கான காட்சிகளும் படு மாஸாக இருந்தன. இதனால் தியேட்டரில் ரஜினியின் மாஸ் சரவெடி ரெடி என்று இப்போதே அவரது ரசிகர்கள் படம் குறித்து பேச ஆரம்பித்துவிட்டனர். படமானது நாளை மறுநாள் (பிப்ரவரி 9) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
ரஜினி சொன்ன அட்வைஸ்: இந்நிலையில் ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவுக்கு அட்வைஸ் செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்தப் படத்தில் ரஜினிகாந்த் 1 மணி நேரம் மட்டும்தான் வருவார் என்பதை ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிய வைத்துவிட வேண்டும். இல்லையென்றால் ரஜினிகாந்த்தின் படம் என்று எதிர்பார்ப்போடு வருபவர்கள் ஏமாந்துவிடுவார்கள். அப்படி அவர்கள் ஏமாந்தால் படத்தின் ரிசல்ட் ஒட்டுமொத்தமாக அடிவாங்கிவிடும் என்று கூறினாராம்.
அதனையடுத்துதான் படத்தின் ப்ரோமோஷனில் ரஜினிகாந்த்தின் பெயரை ஐஸ்வர்யா அதிக அளவு பயன்படுத்தவில்லையாம். மேலும் ரஜினிகாந்த்தின் ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காகவும், அவர்களுக்கு தேவையான விருந்தை கொடுக்க வேண்டும் என்பதாலும் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை 50 நிமிடங்களிலிருந்து 1 மணி நேரமாக ஐஸ்வர்யா நீட்டித்துவிட்டதாகவும் புதிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
குசேலன் கொடுத்த பாடம்: முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் குசேலன் படத்தில் நடித்தார். அந்தப் படத்திலும் அவர் கெஸ்ட் ரோல்தான் செய்திருந்தார். ஆனால் படக்குழுவோ ரஜினிகாந்த் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்பதை ரசிகர்களிடம் முறையாக கொண்டு சென்று சேர்ப்பதில் தவறிவிட்டது. இதன் காரணமாக ரஜினி படம் என்று நினைத்து குசேலனுக்கு வந்தவர்கள் பயங்கர ஏமாற்றமடைந்தார்கள்.
படமும் படுதோல்வியை சந்தித்தது. இதனால் ரஜினிகாந்த் ரொம்பவே வருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் கொடுத்த பாடத்தால்தான் தனது மகளுக்கு ரஜினிகாந்த் இப்படி ஒரு அட்வைஸை முன்னெச்சரிக்கையாக கொடுத்திருக்கிறார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதற்கிடையே இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடைந்து தனது பெயரும் உங்களது ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கும் என்று ஐஸ்வர்யா லால் சலாம் ஆடியோ லான்ச்சில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











