ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் பங்கேற்ற ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. அரசியல் பிரபலங்களும் ஆஜர்!

சென்னை: பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், துர்கா ஸ்டாலின், சேகர் பாபு, செங்கோட்டையன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மணமக்களை வாழ்த்தியுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பில் தனது செல்ல மகள் ப்ரீத்தாவின் திருமணத்தை மே 9ம் தேதியான இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார் ஐசரி கணேஷ்.

சமீபத்தில் லீலா பேலஸில் நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்திய நிலையில், தற்போது தமிழ் சினிமா பிரபலங்கள் ஒட்டுமொத்தமாக திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

Rajinikanth and Kamal Haasan attends Ishari Ganesh daughter Wedding

இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் நடிகை அதிதி ஷங்கர், ரவி மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்ற காட்சிகள் வெளியான நிலையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மணமக்களை வாழ்த்தும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

எளிமையாக வந்த ரஜினிகாந்த்: எப்போதும் போலவே நடிகர் ரஜினிகாந்த் ரொம்பவே எளிமையாக கதர் சட்டை மற்றும் வெள்ளை வேட்டி அணிந்துக் கொண்டு ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தாவின் திருமணத்தில் பங்கேற்ற புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. பச்சை நிறத்தில் ஒரு கிஃப்ட் பாக்ஸ் ஒன்றை கொடுத்துவிட்டு ரஜினிகாந்த் போஸ் கொடுத்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

Rajinikanth and Kamal Haasan attends Ishari Ganesh daughter Wedding

கலக்கலாக வந்த கமல்ஹாசன்: வெள்ளை நிற குர்தா மற்றும் கூலர்ஸ் அணிந்துக் கொண்டு கலக்கலாக வந்த கமல்ஹாசன் வெள்ளை நிறத்தில் பூப்போட்ட பேக்கிங் கவருடன் ஒரு பெரிய பரிசுப் பொருளை மணமக்களுக்கு வழங்கி வாழ்த்தியுள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் மூவரும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டதை பார்க்கவே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Rajinikanth and Kamal Haasan attends Ishari Ganesh daughter Wedding

துர்கா ஸ்டாலின் பங்கேற்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக துர்கா ஸ்டாலின் அமைச்சர் சேகர் பாபுவுடன் வந்து திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அதன் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

சத்யராஜ் முதல் மாரி செல்வராஜ் வரை: இயக்குநர்கள் சுந்தர். சி, வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பாக்யராஜ், பி. வாசு உள்ளிட்ட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். நடிகர் சத்யராஜ், ரவி மோகன், பாடகி கெனிஷா, அதிதி ஷங்கர், அரசியல் தலைவர் வைகோ என தொடர்ந்து பலர் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.

கோடிக்கணக்கில் செலவு: பல கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான ஐசரி கணேஷ் மறைந்த நடிகர் ஐசரி வேலனின் மகன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சுமார் 40 படங்களில் நடித்துள்ள ஐசரி வேலன் அரசியலிலும் ஆளுமையாகத் திகழ்ந்தவர். அவரது மகன் ஐசரி கணேஷ் வேல்ஸ் பல்கலைக்கழகத்தை நடத்தி வருவது மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி பல பெரிய படங்களை தயாரித்துள்ளார். நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2, ரவி மோகனின் ஜீனி உள்ளிட்ட படங்களும் அவரது தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. பல கோடி ரூபாயில் தனது மகளின் திருமணத்தை நடத்தியுள்ளார் ஐசரி கணேஷ் என்கின்றனர். மேலும், மாலத்தீவில் ட்ரீம் வெட்டிங் ஒன்றும் நடைபெறவுள்ளதாகவும் 250 பிரபலங்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களை அங்கே அழைத்துச் செல்ல தனி விமானத்தையும் ரெடி செய்துள்ளார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X