விஜய்யின் ஜன நாயகனுக்கு வேட்டு வைக்க முடிவு.. பராசக்தி ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த், கமல்ஹாசன்?

சென்னை: சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் கலந்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது.

Rajinikanth and Kamal Haasan may attend Sivakarthikeyan s 25th film Parasakthi Audio launch

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பதால், ஆடியோ லாஞ்சை மிகவும் பிரமாண்டமாக நடத்த டான் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளது.

பராசக்தி ஆடியோ லாஞ்ச் எப்போ?: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா நடித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஜனவரி 4ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக ஆடியோ லாஞ்ச் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ரஜினிகாந்த், கமல் பங்கேற்பு: கமல் தயாரிப்பில் விரைவில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். ஏற்கனவே கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகியுள்ள பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் கலந்துக் கொள்ளப் போவதாக கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கூடிய விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் எனக் கூறுகின்றனர்.

ஜன நாயகனுக்கு வேட்டு: விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு போட்டிப் படமாகவே பராசக்தி படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை விஜய் ரசிகர்கள் வைத்து வரும் நிலையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் சிவகார்த்திகேயனுக்காக களமிறங்கினால் அது கண்டிப்பாக ஜன நாயகன் படத்தின் வசூலுக்கு வேட்டு வைக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும், டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா பேச்சுக்களை பராசக்தி ஆடியோ லாஞ்ச் கண்டிப்பாக முறியடிக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X