அட செமயா இருக்குமே.. மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கும் ரஜினிகாந்த் - கமல் ஹாசன்

சென்னை: ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் இந்திய சினிமாவின் அடையாளங்களாக இருப்பவர்கள். இருவரும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள். கடந்த பல வருடங்களாக இணைந்து நடிக்காமல் இருக்கும் அவர்கள் இப்போது மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் நடிகர்கள் ரஜினியும், கமல் ஹாசனும். திறமையின் துணையால் வளர்ந்த அவர்கள் இருவரும் இப்போது இந்திய சினிமாவின் அடையாளமாக திகழ்கின்றனர். அடையாளம் மட்டுமின்றி வளர்ந்துவரும் நடிகர்களுக்கு இரண்டு பேருமே இன்ஸ்பிரேஷனாக இருந்துவருகின்றனர். ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்தனர். ஒருகட்டத்தில் ரஜினியை அழைத்த கமல் ஹாசன் நாம் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தால் இருவரது கரியரும் முன்னேறாது என்று கூறி தனியாக நடிக்குமாறு அறிவுறுத்தினார். கமல் ஹாசன் மீது எப்போதும் தீராத நட்பு கொண்ட ரஜினிகாந்த்தும் அதை ஆமோதித்து தனியாக நடிக்க ஆரம்பித்தார்,

rajinikanth kamal haasan karthi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: தனியாக நடிக்க ஆரம்பித்து தனக்கென பிரத்யேக உடல்மொழியையும், ஸ்டைலையும் உருவாக்கிக்கொண்ட ரஜினிகாந்த் உச்சத்திற்கு சென்றார். அவரது நடை, உடை, பாவனையை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் அவரை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர வைத்தனர். இன்றுவரை ரஜினிகாந்த் அதே பட்டத்துடன் வலம் வருகிறார். கம்ர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்தாலும் ஜானி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை என நடிப்புக்கு ஸ்கோப் உள்ள படங்களில் அவர் தனது திறமையையும் நிரூபித்தவர்.

உலக நாயகன் கமல் ஹாசன்: ரஜினிகாந்த் ஒருபக்கம் பெரும்பாலும் கமர்ஷியல் படங்களில் நடிக்க, கமல் ஹாசன் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து பல புதுமைகளை புகுத்தினார். இதன் காரணமாக கமல் ஹாசன் உலக நாயகன் என அழைக்கப்படுகிறார். அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாசம் நிச்சயம் இருந்துவிடும் என்ற விதியும் இன்று அகலாமல் இருக்கிறது. ரஜினியேகூட கமல் ஹாசனை கலையுலக அண்ணா என அழைத்த சம்பவம் அரங்கேறியிருப்பது அனைவரும் அறிந்தது.

பத்திரிகையாளர்களிடம் ரஜினி: ரஜினிகாந்த் தனது மனதில் என்ன நினைக்கிறாரோ அதனை அப்படியே கொட்டிவிடும் பழக்கமுடையவர். தனது திருமணம் குறித்த விஷயத்தில் பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியது, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என பேசியது என்று அந்தப் பட்டியல் மிக நீளம். தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவம் தொடர்பாக அவர் பேசியதும் விவாதத்தை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரஜினியின் பத்திரிகையாளர் சந்திப்பில் சில சர்ச்சைகள் இருந்தாலும் மேடை பேச்சில் ஒரு சாமானியத்தனம் இருப்பதாக ரசிகர்கள் கூறுவதுண்டு.

கமல் ஹாசனின் யோசிக்க வைக்கும் பேச்சு: ஆனால் கமல் ஹாசனின் பத்திரிகையாளர் சந்திப்போ, மேடை பேச்சோ நேர்மாறானது. அவரது படங்கள் போலவே பேச்சும் புரிவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும் என்ற கருத்து பொதுவாக மக்களிடம் உண்டு. அதேசமயம் பேச்சை புரிந்துகொண்டால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் என்றும் சிலர் கூறுவார்கள். இப்போது ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கமல் ஹாசன் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார்.

மீண்டும் இணையும் இருவர்: இந்நிலையில் இரண்டு பேரும் மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். இதுகுறித்து நேற்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, 'நடிகர் சங்க கடனை அடைக்க கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் சேர்ந்து நடிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அது எங்களுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X