twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியுடன் ரகசிய ஒப்பந்தம்.. கமல் ஓபன் டாக்!

    |

    Recommended Video

    கமலை திட்டிய சிவாஜி | SUPERSTAR SPEECH|PADMASHRI BALACHANDER STATUE UNVEIL FUNCTION|FILMIBEAT TAMIL

    சென்னை: இயக்குநர் இமயம் கே. பாலசந்தரின் திருவுருவச் சிலையை தனது அலுவலகத்தில் திறந்து வைத்த பிறகு நடிகர் கமல் பேசி வருகிறார்.

    இந்திய அரசாங்கம் சார்பில் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டுள்ள வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ரஜினி மிகவும் பொருத்தமானவர் என்றும், 43 வருடங்கள் தாமதமாக அது வழங்கப்படுகிறது என்றும் கமல் பேசினார்.

    Rajinikanth and me made a secret decision, Kamal opens up

    கமல்ஹாசனின் 65வது பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக இன்று பாலசந்தரின் சிலை திறப்பு விழா சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்தில் திரை பிரபலங்கள் சூழ திறந்து வைக்கப்பட்டது.

    இந்த விழாவில், கவிஞர் வைரமுத்து, மணிரத்னம், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பேசியதை தொடர்ந்து நடிகர் கமல் இறுதி உரை ஆற்றினார்.

    நடிகர் கமல், தனது சொந்த ஊரான பரமக்குடியில் தனது குடும்பத்தாருடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். மேலும், சொந்த ஊரில் கமல்ஹாசனின் தந்தை ஸ்ரீனிவாசனின் சிலை திறந்து வைத்தார்.

    இன்று சென்னையில், தனது சினிமா குருவான கே. பாலசந்தரின் திருவுருவச் சிலையை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து திறந்து வைத்தனர்.

    Rajinikanth and me made a secret decision, Kamal opens up

    சிலை திறப்பு விழாவில் இறுதியாக பேசிய கமல்ஹாசன், மணிரத்னத்துக்கும் தனக்கும் ஒரே கனவு தான் என்றும், அதனை தனித்தனியாக செய்து வருவதாக கூறினார்.

    மேலும், ரஜினியும் தானும் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம். அதனால், தங்களை பற்றி மற்றவர்கள் பேசும் பேச்சுக்களுக்கு வழியில்லாமல் போனது என நடிகர் கமல் கூறினார்.

    ரஜினியும், நானும் எங்கள் படங்களை நாங்களே பாராட்டிக் கொள்வோம், நன்றாக இல்லை என்றால் விமர்சித்தும் கொள்வோம் எனக் கூறினார்.

    ரஜினிகாந்த் நடிக்க வந்த ஒரே ஆண்டில் சூப்பர் ஐகானாக மாறிவிட்டார். இந்திய அரசாங்கம் அவருக்கு இப்போது அறிவித்துள்ள விருது தாமதமானது எனக்கூறிய கமல், அந்த விருதுக்கு முற்றிலும் தகுதியானவர் ரஜினி என கமலுக்கு ஏன் அந்த விருதினை வழங்கவில்லை என்று எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    English summary
    SuperStar Rajinikanth was most considerable person for the Indian Iconic Award. But it’s too late for him says Kamal Haasan after inaugurate K. Balachander statue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X