உச்சகட்ட சந்தோஷத்தில் ரஜினிகாந்த், விஜய்.. 2 வருஷமா பாக்ஸ் ஆபிஸில் வெறித்தனம்.. மற்றவர்கள் நிலைமை?
சென்னை: தமிழ் சினிமாவில் தொடர்ந்து 2 வருடங்களாக முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் ரஜினிகாந்த் அசத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவையே இந்த இருவரும் தான் தங்கள் தோளில் தூக்கி சுமந்து காப்பாற்றி வருகிறார்கள் என தியேட்டர் உரிமையாளர்கள் எல்லாம் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 2023ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு மற்றும் லியோ படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை நடத்தி தமிழ் சினிமாவை தலைநிமிரச் செய்தது.

மறுபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து மிகப்பெரிய வசூல் வேட்டையனாக இந்த வருடமும் மாறியுள்ளார். அடுத்தடுத்த வெற்றிகளால் விஜய் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே உச்சகட்ட உற்சாகத்தில் இருப்பது ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
73 வயதிலும் சூப்பர் ஸ்டார்: இன்னும் எத்தனை சூப்பர் ஸ்டார் படங்கள் வரப்போகிறதோ தெரியவில்லை. குறைந்தது ஒரு 10 படமாவது வந்து விடும் என்கிற நம்பிக்கையும் ஆசையும் ரசிகர்களுக்கு மட்டுமின்றி சினிமா துறைக்கே இருக்கத்தான் செய்கிறது. 73 வயதில் நாமெல்லாம் நடப்போமா? இருப்போமா என்றே தெரியவில்லை. அந்த மனுஷனோட ஸ்பீட் வாக்கை பார்க்கவே 200 ரூபாய் தாரளமாக கொடுக்கலாம். ரசிகர்களை என்டர்டெயின் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த வயதிலும் டான்ஸ், ஃபைட், நல்ல மெசேஜ் என வெயிட்டு காட்டி வருகிறார். கொண்டாடுவதற்கு பதிலாக இவரையெல்லாம் ட்ரோல் செய்ய எப்படித்தான் மனசு வருதுன்னே தெரியல என பொதுமக்களே கூறி வருகின்றனர்.

2 வருடங்களாக பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷா: கடந்த ஆண்டு ஜெயிலர் படத்தின் மூலம் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டையாடிய ரஜினிகாந்த் இந்த ஆண்டு 4 நாட்களில் 240 கோடி ரூபாய் வசூலை வேட்டையன் படத்தின் மூலம் எடுத்து காட்டி தான் இன்னமும் பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷா என்பதை நிரூபித்துள்ளார். அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா உள்ளிட்ட பல நடிகர்கள் ஹீரோவாக நடிக்கும் படங்கள் எல்லாம் இத்தனை கோடி வசூல் செய்யுமா? என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை என அவர்களே கூறுவார்கள். அமிதாப் பச்சன் சொன்னது போலவே ரஜினிகாந்த் நடிகர்களிலேயே சுப்ரீம் தான்.
ரஜினிகாந்த் மகிழ்ச்சி: நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை ருசித்த ரஜினிகாந்த் இந்த ஆண்டு ஞானவேல் இயக்கத்திலும் வேட்டையன் படத்தின் மூலமும் மிகப்பெரிய மகிழ்ச்சியில் உள்ளார். அதன் வெளிப்பாடு தான் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் உடன் இணைந்து வேட்டையன் வெற்றியை ரஜினிகாந்த் கொண்டாடியதற்கான காரணம் என்கின்றனர். கூடிய விரைவிலேயே வேட்டையன் வெற்றி விழாவும் நடக்கும் என்கின்றனர்.

விஜய் ரொம்ப ஹேப்பி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக சந்தோஷத்தில் இருப்பது தளபதி விஜய் தான். கடந்த ஆண்டு வாரிசு, லியோ என பேக் டு பேக் 2 பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படங்களை கொடுத்த விஜய் இந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் படத்தின் மூலமும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் என்டர்டெயின் செய்துள்ளார். அடுத்து விஜய் நடித்து வரும் கடைசி படமான தளபதி 69 படமும் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என்பது கன்ஃபார்ம். விஜய் மற்றும் ரஜினிகாந்த் படங்கள் வரவில்லை என்றால் தான் அவர்களது அருமை ரசிகர்களுக்கு தெரியும் என்றும் அவர்களை முடிந்தவரை கொண்டாடுங்கள் என்பதே பொதுவான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
மற்ற நடிகர்களின் நிலைமை: விஜய், ரஜினிகாந்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் அடுத்த ஆண்டு பேக் டு பேக் விடாமுயற்சி, குட் பேட் அக்லி கொடுத்து மாஸ் காட்ட காத்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான துணிவு படத்தை தவிர அஜித்துக்கு பெரிய படங்கள் அமையவில்லை. சூர்யா ரசிகர்கள் கங்குவா படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர். இந்த ஆண்டே அந்த படம் வெளியானால் செம சந்தோஷம் தான். தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் 150 கோடி வசூலை ஈட்டியுள்ளது. சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக காத்திருக்கிறது. ஆனாலும், ரஜினிகாந்த், விஜய்க்கு போட்டியாக தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் மற்ற நடிகர்கள் இல்லை என்பது தான் மறுக்கமுடியாத உண்மையாக உள்ளது.



Click it and Unblock the Notifications











