கீர்த்தி சுரேஷ் அருகே விஜய்.. கடைசியில சங்கீதா.. மீண்டும் வெடித்த ரஜினி vs விஜய் ரசிகர்கள் சண்டை!
சென்னை: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோருடன் ஜாம் நகருக்கு சென்ற போது, புகைப்படக் கலைஞர்கள் போட்டோ எடுக்க முன் வந்தனர். உடனடியாக உடன் சென்ற பணிப்பெண்ணை நடிகர் ரஜினிகாந்த் தூரப்போ என கைகளால் செய்கை செய்து அவரை விலக்கி விட்டு போட்டோ எடுத்துக் கொண்ட வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளன.
ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் படம் பார்க்கும் போது பணிப்பெண்ணை இதே போல தியேட்டருக்கு அழைத்துச் சென்று இருக்கையில் உட்கார விடாமல் நிற்க வைத்தார் என சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், அம்பானி மகன் ப்ரீ வெட்டிங்கில் இப்படியொரு சம்பவம் நடந்ததை பார்த்த விஜய் ரசிகர்கள் மீண்டும் ரஜினிகாந்துக்கு எதிராக ஏகப்பட்ட எதிர் கருத்துக்களை பதிவிட்டு சோஷியல் மீடியாவில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

சிவகுமாரை தொடர்ந்து சிக்கிய ரஜினி: சமீபத்தில் தனது நண்பர் சால்வை அணிய வந்த போது அந்த சால்வையை தூக்கி கீழே வீசி எறிந்து கோபத்துடன் சிவகுமார் செய்த செயல் வீடியோவாக வெளியாகி பெரிய பிரச்சனையை கிளப்பியது. அதன் பின்னர், நண்பருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டு மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்நிலையில், அம்பானி மகன் திருமண விழாவுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது பணிப்பெண்ணை போட்டோ எடுக்கும் போது விலகி நில் என சொன்ன காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி நாடு முழுவதும் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நபரின் மோசமான செயலை பாருங்க என விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.
ரஜினிகாந்த் ரசிகர்கள் பதிலடி: "விஜய் பேன்ஸுக்கு அந்த அக்கா மேல பாசம்லாம் இல்ல தலைவர் தன் மனைவி மகளோட ஒன்னா இருக்காரே நம்ம விஜயால முடிலனு காண்டு அவ்ளோதான்" என விஜய் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ் அருகே விஜய்: மேலும், நடிகர் விஜய் சர்க்கார் படம் உருவாகி வந்த சமயத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி சங்கீதா அருகே நிற்காமல் கீர்த்தி சுரேஷ் பக்கத்தில் நின்ற காட்சிகளையும் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஷேர் செய்து பெரியளவில் மீண்டும் சோஷியல் மீடியா சண்டையை ஆரம்பித்துள்ளனர்.

மீண்டும் வெடித்த சண்டை: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய காக்கா - கழுகு பஞ்சாயத்தை லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் முடித்து வைத்த நிலையில், இரு தரப்பு ரசிகர்களும் சண்டை போடுவதை நிறுத்தியிருந்தனர். இந்நிலையில், அம்பானி மகன் திருமண விழாவுக்கு சென்ற ரஜினிகாந்தின் செயலை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்ய தொடங்கி உள்ள நிலையில், மீண்டும் விஜய் என்னவெல்லாம் செய்தார் என தோண்டியெடுத்து ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த பிரச்சனை எங்கே போய் முடியப் போகிறது என தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











