நெப்போலியனிடம் மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்?.. அச்சோ சூப்பர் ஸ்டார் இப்படியும் செய்தாரா?
சென்னை: நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம் சமீபத்தில் ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் மீனா, குஷ்பூ, ராதிகா, கலா மாஸ்டர், சரத்குமார் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். அக்ஷயா என்ற பெண்ணை தனுஷ் திருமணம் செய்திருக்கிறார். மணமக்கள் இரண்டு பேருக்கும் பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். இந்தச் சூழலில் நெப்போலியனிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெப்போலியன் என்றாலே அவரது வாட்டசாட்டமான உருவமும், கனீர் என்ற குரலும், சிறந்த நடிப்பும் உடனடியாக நினைவுக்கு வரும். ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவர் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோருடனும் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் இருந்த அவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு மகன்களில் மூத்த மகனான தனுஷுக்கு பத்து வயதில் தசை சிதைவு நோய் இருந்தது நெப்போலியனுக்கு தெரியவந்தது.

அமெரிக்கா சென்ற நெப்போலியன்: அவருக்கு முதலில் இந்தியாவில் அளிக்கப்பட்ட சிகிச்சை ஒத்துவரவில்லை. அதனையடுத்து தன் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன். அங்கு தனுஷுக்கு சிகிச்சை அளித்ததோடு மட்டுமின்றி தனியாக மென்பொருள் நிறுவனம் ஒன்றையும் தொடங்கி அந்த கம்பெனிக்கு தனுஷை CEOவாகவும் ஆக்கினார். மேலும் அவருக்கு தேவையான சகல வசதிகளுடன் கூடிய வீடு ஒன்றையும் கட்டி மிக பாதுகாப்பாக பார்த்துவந்தார்.
திருமணம்: சூழல் இப்படி இருக்க தனக்கு பிறகு தன்னுடைய மகனின் எதிர்காலம் என்னவாகும் என்ற எண்ணத்தில் அவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து அக்ஷயா என்ற பெண்ணை பார்த்தார்கள். அக்ஷயாவுக்கும் தனுஷை பிடித்துப்போனதை தொடர்ந்து திருமணம் செய்துகொள்ள ஒத்துக்கொண்டார். அதன்படி சமீபத்தில்தான் ஜப்பானில் கோலாகலமாக தனுஷ் - அக்ஷயா திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமணத்தில் ராதிகா, சரத்குமார், குஷ்பூ, மீனா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள்.
களைகட்டிய திருமணம்: திருமணத்தில் கலந்துகொண்ட மீனா, குஷ்பூ உள்ளிட்டோர் நடனம் ஆடி அசத்தினார்கள். அதுமட்டுமின்றி தனுஷுக்கு திருமணம் செய்து வைத்த நெப்போலியன் பற்றி சில பேட்டிகளில் புகழ்ந்தும் பேசினார்கள். இருந்தாலும் இந்தத் திருமணம் தேவையில்லாத ஒன்று; அக்ஷயாவின் வாழ்க்கை பாழாகிவிட்டது என்று ஒருதரப்பினர் விமர்சனம் செய்துதான் வருகிறார்கள். ஆனால் நெப்போலியன் அவரது மகனுக்கு திருமணம் செய்கிறார். இதில் விமர்சிக்க என்ன இருக்கிறது என்று பலரும் விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துவருகிறார்கள்.
மன்னிப்பு கேட்ட ரஜினி?: இதற்கிடையே தனது மகன் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டில் ரஜினிகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கு அழைப்பிதழ் கொடுத்தார் நெப்போலியன். ஆனால் பலரால் கலந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தனுஷின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாததால் நெப்போலியனுக்கு ஃபோன் செய்த ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டதாகவும்; தனுஷிடம் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து; தான் அமெரிக்காவுக்கு வரும்போது வந்து சந்திப்பதாக உறுதியளித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











