கட்சி ஆரம்பிக்க ரெடியான ரஜினி.. முக்கிய தலையை தூக்க பிளான் செய்த சூப்பர் ஸ்டார்.. மிஸ் ஆகிடுச்சே!

சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ரொம்பவே விரும்பினார்கள். அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி; அரசியல் பிரவேசத்தையும் அறிவித்தார் சூப்பர் ஸ்டார். ஆனால் சில நாட்களிலேயே தனது உடல்நலத்தை காரணம் காட்டி அதிலிருந்து ஜகா வாங்கினார். இதனால் காலங்காலமாக ஆசை வைத்திருந்த ரஜினி ரசிகர்கள் ஏமாற்றத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்கள்.

ரஜினிகாந்த் 90களில் திமுக - தமாகா கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்தார். அதற்கும் முன்னதாக அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுடன் மோதல் போக்கும் உருவானது. ஓபனாக திமுக கூட்டணிக்கு அவர் குரல் கொடுத்ததிலிருந்தே அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தார்கள். அவரும் தெளிவான பதில் எதையும் சொல்லாமல் நழுவிக்கொண்டே இருந்தார்.

Rajinikanth Asked Me to Join His Party Annamalai Makes Big Revelation
Photo Credit:

அரசியலுக்கு வருவது உறுதி: இப்போது வந்துவிடுவார், அப்போது வந்துவிடுவார் என்று பல ஆண்டுகள் காத்திருந்த ரசிகர்களுக்கு 2017ஆம் ஆண்டுதான் தெளிவான பதிலை சொன்னார் சூப்பர் ஸ்டார். அதில், 'நான் அரசியலுக்கு வருவது உறுதி. எனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும். சிஸ்டத்தை மாற்றியே ஆக வேண்டும். இப்போது அதை செய்யாவிட்டால் பின் எப்போதும் அதனை செய்ய முடியாது' என்று கூறியிருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தார்கள்.

Also Read
அம்மா மறைந்த பிறகு மௌனம் கலைத்த அஜித்.. ஏகே நொறுங்கி போயிட்டாரு
அம்மா மறைந்த பிறகு மௌனம் கலைத்த அஜித்.. ஏகே நொறுங்கி போயிட்டாரு

ஜகா வாங்கிய ரஜினி: ஆனால் அப்படி அறிவிப்பு வெளியிட்ட சில நாட்களிலேயே தனது உடல்நலத்தை காரணம் காட்டி அரசியல் பிரவேசத்திலிருந்து ஜகா வாங்கினார். அதற்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தும் அவர்; அவ்வப்போது அரசியல் மேடைகளில் தலை காட்டுவார். நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்புகூட தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, ரஜினியை அரசியல் ரீதியான கருத்தில் விவகாரமாக பேசி வைக்க அனைவருமே கொந்தளித்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் நம்பிக்கை: அவருக்கு தொடர்ந்து கண்டனங்கள் வலுத்த நிலையில் ரஜினியிடம் மன்னிப்பும் கேட்டார். ரஜினியும் காத்திருந்து பதில் சொல்லும் என பொடி வைத்து அறிககி வெளியிட்டிருந்தார். இப்போது விஜய் முதலமைச்சராகிவிட்டார். அதை பார்த்த சூப்பர் ஸ்டார் ரசிகர்களோ, அந்த இடத்தில் எங்கள் தலைவர் இருந்திருக்க வேண்டியது என ரத்த கண்ணீர்தான் வடிக்கிறார்கள். அரசியலுக்கு மட்டும் வந்திருந்தால் கண்டிப்பாக அவர்தான் முதலமைச்சர் என்றும் அடித்து சொல்கிறார்கள். ரஜினியேகூட அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'அரசியலுக்கு மட்டும் நான் வந்திருந்தால் கண்டிப்பாக வென்றிருப்பேன்' என நம்பிக்கை குறையாமல் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை பேச்சு: இந்நிலையில் பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று சமூக வலைதளங்கள் மூலம் லைவில் வந்தார். அப்போது அவர், 'தான் புதிதாக முதலில் இயக்கத்தை தொடங்கி; பிறகு அதனை கட்சியாக மாற்றுவேன். வரும் பொது தேர்தலில் எனது கட்சி போட்டியிடும்' எனவும் அறிவித்தார். மேலும் ரஜினி குறித்தும் ஓபனாக சில விஷயங்களை அப்போது பேசினார் அவர்.

ரஜினி பற்றி: ரஜினி குறித்து பேசிய அவர், "2020ஆம் ஆண்டு டெல்லியில் நான் பாஜகவில் இணைய சென்றபோது ரஜினி எனக்கு ஃபோன் செய்தார். எனக்கும் அவருக்கும் நட்பு நான் ஐபிஎஸ் பதவியிலிருந்து வந்த பிறகு ஏற்பட்ட நட்பு. அவரிடம் நான் நிறைய பேசுவேன். அவரது அரசியல் பாதை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் பேசியிருக்கிறேன். பாஜகவில் நான் சேர்வதற்கு ஒருநாள் முன்பு அவர், தன்னுடைய அரசியல் கட்சியில் சேர வேண்டும் என அழைப்பு விடுத்தார். அப்போது எனக்கு மூன்று விஷயங்கள்தான் என் கண் முன்னால் இருந்தது.

என்ன விஷயங்கள்?: தமிழ்நாட்டுக்கு எது நல்லது? ரஜினிக்கு எது நல்லது? அண்ணாமலைக்கு எது நல்லது? என்பதுதான் அது. அரசியலுக்கு வராமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது.அவர் முதலில் ஆரோக்கியமாக சந்தோஷமாக இருக்க வேண்டும். பாஜகவில் இணைவேன் என சந்தோஷிடம் வாக்குறுதி கொடுத்திருந்தேன். அதை மீற கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் ரஜினியிடம் , ஐயா என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என கூறினேன். அவரும் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்து அவரது அரசியல் பாதைகளை அடுத்து தீர்மானித்தார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X