ரஜினிகாந்த்தின் பிறந்தநாள்.. யாரும் கிட்ட கூட வரமுடியாது.. யப்பா இத்தனை கோடி ரூபாய் சொத்து மதிப்பா?
சென்னை: ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது இருக்கும் நடிகர்கள்கூட ரஜினிக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருக்கிறார்கள். முக்கியமாக அவரை தங்களின் ரோல் மாடலாகவும் ஏற்றிருக்கிறார்கள் அவர்கள். 74 வயதாகும் அவர் இப்போதும் படு பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக கூலி படம் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் இன்று தனது 74ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
இந்திய சினிமா எத்தனையோ ஹீரோக்களை கண்டிருக்கிறது. பொதுவாக ஹீரோ என்றாலே வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. அதை உடைத்தது யார் என்றால் ரஜினிகாந்த்தான். கருப்பான உருவம், சின்ன கண்கள், ஒல்லியான தேகம் என்று சினிமாவுக்குள் வந்த அவர் படைத்தது எல்லாமே வரலாறுதான். அவர் ஹீரோவான பின்னர்தான் கருப்பாக இருந்தாலும் ஹீரோவாகலாம் என்ற நம்பிக்கை பலருக்கு வந்து; சாமானிய தோற்றம் கொண்ட பலர் ஹீரோவாக மாறினார்கள்.

தொட்டதெல்லாம் ஹிட்தான்: முதலில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் பிறகு வில்லன் என பயணித்துக்கொண்டிருந்தவர் ஒருகட்டத்தில் ஹீரோவாக மாறினார். ஒழுங்காக தமிழ் பேச வரவில்லை; நடனம் ஆட தெரியவில்லை; இவர் எல்லாம் எப்படி ஹீரோவாக நிலைப்பார் என்று பலரும் விமர்சனம் வைத்தார்கள். ஆனால் தன்னிடம் எதையெல்லாம் மைனஸாக சொன்னார்களோ அதையெல்லாம் ப்ளஸ்ஸாக மாற்றினார் ரஜினிகாந்த். அதன் காரணமாக அவருக்கு ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினார்கள்.
ஸ்டைலு ஸ்டைலுதான்: அதேபோல் ரஜினிகாந்த் என்றாலே ஸ்டைல் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது ஸ்டைலின் தாக்கம் இப்போது நடிக்க வரும் ஹீரோக்களிடமும் இருக்கிறது. அதேபோல் யாராக இருந்தாலும் ரஜினிகாந்த்தின் சூப்பர் ஸ்டார் நாற்காலியை பிடித்துவிட வேண்டுமென்பதுதான் குறிக்கோளாக இருக்கிறது. அந்த அளவுக்கு அவரது தாக்கம் நடிகர்களிடம் பரவியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த இடத்துக்கு அவர் வந்ததற்கு முதல் காரணம் திறமை என்றால்; இன்னொரு காரணம் அவரது எளிமை.
எளிமை என்றாலே ரஜினிதான்: தான் எவ்வளவு உச்சத்துக்கு சென்றாலும் தன்னுடன் ஆரம்பகாலத்தில் பழகியவர்களை இப்போதும் மறக்காமல் இருக்கிறார் அவர். அதனை பலரும் பல முறை சொல்லியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாலிகூட குசேலன் திரைப்படத்தில், 'அவர் உருவம் பாரு எளிமை.. அந்த உருவம்தானே அவருக்கு வலிமை.. தலை கனத்திடாத தலைவன் எங்கள் அண்ணன் மட்டும்தான்' என்று ரஜினிக்காக எழுதியிருப்பார். நிச்சயம் அந்த வரிகள் அவருக்கு பொருந்தக்கூடியதுதான்.
இப்போதும் பிஸி: அவருக்கு வயது 74 ஆகிறது. இப்போதும் படு பிஸியாக நடித்துவருகிறார். கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருந்த அவர்; இப்போது கூலி படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி ஜெயிலர் 2 படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களின் அப்டேட்டுகளும் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் இன்று தனது 74ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
சொத்து மதிப்பு: இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி போயஸ் கார்டனில் கடந்த 2002ஆம் ஆண்டே பங்களா கட்டியிருந்தார் அவர். அதன் இன்றைய மதிப்பு மொத்தம் 50 கோடி ரூபாய்வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட வெளிநாட்டு கார்களும் இருக்கின்றன. அவைகளின் மதிப்பே கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்வரை இருக்கும் என்றும்; ஒரு படத்துக்கு 150 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறும் அவருக்கு மொத்தம் 500லிருந்து 600 கோடி ரூபாய்வரை மொத்த சொத்து மதிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











