Rajinikanth: கமலோட நடிக்க கலக்கலாக ரெடியான சூப்பர் ஸ்டார்.. ரஜினிகாந்தின் நியூ லுக் பார்த்தீங்களா!
சென்னை: நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்கப் போவது அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான புரமோ ஷூட் நடைபெறவுள்ளது. அதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய லுக்கில் கிளம்பிச் செல்லும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
கூலி, ஜெயிலர் 2 படங்களுக்காக லேசான தாடயுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த நிலையில், அடுத்த படத்துக்காக சற்றே தனது தோற்றத்தை ரஜினிகாந்த் மாற்றியுள்ளார் எனக் கூறுகின்றனர்.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கப் போகும் படத்திலும் இதே லுக் தான் என்றும் அதனால் தான் சூப்பர் ஸ்டார் 2 படங்களுக்கும் சேர்த்து ரெடியாகி விட்டார் என்கின்றனர்.
கமலுடன் நடிக்க கலக்கலாக: சிவாஜி படத்தில் முல்தானி மட்டியில் குளித்து முதல்வன் அர்ஜுன் சேற்றில் விழுந்ததற்கு பிறகு எழுந்து வருவதை போல சூப்பர் ஸ்டார் எழுந்து வரும் போது கழுவிட்டு வந்தேன்னா கமல்ஹாசன் மாதிரி இருப்பேன் என தனது நண்பரை வைத்து டயலாக் பேசியிருப்பார். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இருவரும் திரையில் ஒன்றாக நடிக்கவுள்ள நிலையில், கமலுடன் நடிக்க கலக்கலாக ரஜினிகாந்த் ரெடியாகி விட்டார் என்கின்றனர்.
க்ளீன் ஷேவ் லுக்: க்ளீன் ஷேவ் லுக்கில் நடிகர் ரஜினிகாந்த் காரில் ஏறிச் செல்லும் காட்சிகள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. ஒரு பக்கம் சேலத்தில் விஜய் மக்களை சந்தித்து வருவது டிரெண்டாகி வரும் நிலையில், இன்னொரு பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் டிரெண்டாகி வருகிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து டார்க் காமெடியில் கலக்கினால் இன்னொரு தில்லு முல்லு கன்ஃபார்ம் என்கின்றனர்.
ரசிகர்கள் வெயிட்டிங்: ஜெயிலர் 2 படத்தை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர் என ஏதாவது ஒரு அப்டேட் வராதா? என காத்திருக்கும் ரசிகர்களுக்கு அடித்தது ஜாக்பாட் என்பது போல ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் நடிக்கப் போகும் புதிய படத்தின் புரமோ வீடியோவே விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங்கில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











