அப்துல் ரகுமான் மறைவு தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பு! - ரஜினிகாந்த்
சென்னை: கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பு என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கவிஞரும், தமிழ்பேராசிரியருமான அப்துல் ரகுமான் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் அப்துல் ரகுமான் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன், வைகோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"மதிப்பிற்குரிய கவிக்கோ அப்துல் ரகுமான், ஒரு சிறந்த எழுந்தாளர், அவரது மறைவு தமிழ் இலக்கியத் துறைக்கு பேரிழப்பு. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்".
நடிகர் கமல் ஹாஸனும் ட்விட்டரில் அப்துல் ரகுமானுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்..


Click it and Unblock the Notifications











