கோச்சடையான் ஆடியோ ரிலீசில் அமிதாப் காலில் விழுந்து ஆசி வாங்கிய ரஜினி....

மும்பை: திரையுலகில் நீங்காத நட்புடன் இருப்பவர்களுக்கு ரஜினியும், அமிதாப்பும் மிகச் சிறந்த உதாரணம்.

'கோச்சடையான்' படத்தின் இந்தி முன்னோட்டக் காட்சி மற்றும் இசை வெளியீட்டு விழா மும்பையில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்ற இந்த விழாவில் ட்ரைலர் - பாடல்களை வெளியிட்டுப் பேசினார் அமிதாப் பச்சன்.

அப்போது, 'இந்திய சினிமா வரலாற்றை எழுதுவோர் இனி கோச்சடையானுக்கு முன், கோச்சடையானுக்குப் பின் என்றே எழுத வேண்டும். அத்தனை சிறப்பு வாய்ந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படம் இது, என அமிதாப் பச்சன் பேசினார்.

விழாவில் சம்பிரதாயத்துக்காக மட்டும் புகழ்பவரல்ல நான் என்பதை நிரூபிப்பது போல ரஜினி மற்றும் சவுந்தர்யாவைப் பாராட்டி தன் வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அமிதாப்.

ஆச்சர்யம்... ஆனால் உண்மை

ஆச்சர்யம்... ஆனால் உண்மை

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அமிதாப் கூறும்போது, ‘மோஷன் கேப்சர்... அவதார், டின் டின் மாதிரி முதல் தடவை இந்தியாவில்... அதுவும் பெண் ஒருவரால்.... ' என ஆச்சர்யம் தெரிவித்துள்ளார்.

பெருமை

பெருமை

மேலும், ரஜினியின் படத்தை அவரது மகளே தயாரித்துள்ளார் என பெருமை பாராட்டியுள்ளார் அமிதாப்.

நல்ல நண்பர்கள்...

நல்ல நண்பர்கள்...

திரையுலக நண்பர்கள், ஒன்றாக வேலை பார்த்தவர்கள் என்ற நிலையையெல்லாம் தாண்டி, ரஜினி-அமிதாப் இருவருக்கிடையே நல்ல புரிதல் ஒன்று உள்ளது. அதனால் தான் இன்றளவும் நல்ல குடும்ப நண்பர்களாக அவர்கள் திகழ்கின்றனர்.

ஆசிர்வாதம்...

ஆசிர்வாதம்...

இதற்கு நல்ல உதாரணமாக, விழா மேடையில் அமிதாப் காலில் விழுந்து ரஜினி ஆசிர்வாதம் வாங்கிய சம்பவத்தைக் கூறலாம்.

ஒரே நாளில் ரிலீஸ்...

ஒரே நாளில் ரிலீஸ்...

அமிதாப்பும் ரஜினியை தன் போட்டியாளராக நினைக்காமல், அவரது படத்தின் ஆடியோ ரிலீஸுக்கு வந்திருந்தார். காரணம் ரஜினியின் ‘கோச்சடையான்' ரிலீசாகும் அதே தேதியில் தான் அமிதாப்பின் ‘பூம்நாத்' படமும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X