தலைவர் 173.. மொத்தம் 83 கெட்டப்புகளா?.. ஆத்தாடி தலையே சுத்துதே.. ரஜினியை வேறு மாதிரி காட்டப்போகும் சிபி

சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தை இயக்கு வாய்ப்பினை வேண்டாம் என்று மறுத்துவிட்டார் சுந்தர்.சி. அவர் இப்படத்திலிருந்து வெளியேறியதற்கு ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட சுந்தர் ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு அமைதியாகிக்கொண்டார். அவரைத் தொடர்ந்து டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றார். இந்நிலையில் படத்தில் சிபியின் செயல் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், விண்வெளி நாயகன் கமல்ஹாசனும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக முதலில் தகவல்கள் பரவின. ஆனால் அந்தப் படம் லேட்டாக ஆரம்பிக்கப்படும் என்றும் முதலில் ரஜினியை வைத்து கமல் ஒரு படத்தை தயாரிப்பார் என்று சொல்லியும் சுந்தர்.சியை இயக்குநராக கமிட் செய்தார்கள். இளம் இயக்குநர்கள் வரிசையாக ரஜினிக்கு சொதப்பலான படங்களை கொடுப்பதால் சீனியர் இயக்குநருடன் இணைந்தார் ரஜினிகாந்த். கமலும் தனது ஃபுல் சப்போர்ட்டை கொடுத்தார்.

Rajinikanth Film Sundar C Exit Cibi Chakaravarthi Finalises 3 Looks from 83 Options
Photo Credit:

இயக்க மறுத்துவிட்ட சுந்தர்: சுந்தர்.சியும் ஹிட் படம் கொடுக்கக்கூடிய இயக்குநர்தான் என்பதால் ரசிகர்கள் முதலில் அவரது பெயர் அறிவித்தபோது கொஞ்சம் முணகினாலும் அவர்கள் மனதில் மத கஜ ராஜா திரைப்படத்தின் ரிசல்ட் வந்து இதம் கொடுத்தது. ஆனால் திடீரென ட்விஸ்ட்டாக இந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார் அவர். ரஜினி - கமல் இணையும் படத்தில் பணியாற்ற அனைவருமே ஏங்கிக்கொண்டிருக்க இவர் வெளியேறியது அனைவருக்குமே ஆச்சரியத்தை கொடுத்தது.

விலகியதற்கு என்ன காரணம்?: அவரது இந்த விலகலுக்கு பலரும் பலவித காரணங்களை சொல்கிறார்கள். முதலில் இப்படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் உருவாக்க சுந்தர் விரும்பியதாகவும்; அதற்கு கமல் ஒத்துவராததால் இந்த வெளியேற்றம் நடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் உண்மையான காரணம் இல்லை. சுந்தர்.சி சொன்ன கதை சில விஷயங்கள் ஒர்க் அவுட் ஆகாது என ரஜினி தரப்பு நினைத்ததால்; அவருக்கு பதிலாக வேறு இயக்குநரை ஃபிக்ஸ் செய்யும் சூழல் உருவானதாகவும் பேச்சுக்கள் ஓடுகின்றன.

Also Read
குளிக்கும் நேரம்.. மிகப்பெரிய துரோகம்.. ஹார்ட் பிரேக்.. திரிஷா ஓபன்.. என்ன செஞ்சிருக்காங்க பாருங்க?
குளிக்கும் நேரம்.. மிகப்பெரிய துரோகம்.. ஹார்ட் பிரேக்.. திரிஷா ஓபன்.. என்ன செஞ்சிருக்காங்க பாருங்க?

சிபி சக்கரவர்த்தி இயக்குநர்: அவர் வெளியேறியதைத் தொடர்ந்து டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குநரானார். ஏற்கனவே தனது முதல் படம் ரிலீஸாகி மெகா ஹிட்டாகியிருந்த சூழலில்; அவரை அழைத்து பாராட்டியிருந்தார் சிபி. அந்த காலகட்டத்தில் சொல்லப்பட்ட ஒன் லைனைத்தான் இப்போது பக்காவாக திரைக்கதையாக்கியிருக்கிறார். சத்தியமாக படத்தில் சொதப்பமாட்டேன் என்று மேடையில் வைத்தே உறுதியளித்திருக்கிறார். இதன் காரணமாக இப்படத்தை சிபி ஹேண்டில் செய்யும் விதத்தை ஒவ்வொருவருமே உற்று நோக்குகிறார்கள்.

சிபி சக்கரவர்த்தியின் செயல்: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் இந்தப் படத்துக்காக ரஜினிக்கு மொத்தம் 83 கெட்டப்புகளை சாய்ஸில் வைத்திருந்தாராம். அந்த 83ல் மொத்தம் மூன்றே மூன்று கெட்டப்புகள் மட்டும் இறுதி செய்யப்பட்டு ரஜினிகாந்த் தேர்ந்தெடுப்பதற்காக சென்றிருக்கிறதாம். இந்தப் படத்துக்கு அவர் ரெட்ரோ லுக்கில் இருப்பார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. தற்போது இப்படி ஒரு தகவல் வெளியாகி மேற்கொண்டு ஆவலை படத்தின் மீது எழ வைத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X