உயர் நீதிமன்றத்தில் ரஜினி காந்த் வழக்கு.. இந்திப் படத்துக்கு தடை
சென்னை: தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி வெளியாகவிருக்கும் மெய்ன் ஹூன் ரஜினிகாந்த் என்ற இந்திப் படத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார் ரஜினிகாந்த்.
இதனால் அந்தப் படத்தை வெளியிட நீதிபதி இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

'மெயின் ஹூன் ரஜினிகாந்த்' என்ற இந்த படத்தில் தனது பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளாதாக ரஜினி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "மெயின் ஹூன் ரஜினிகாந்த்" என்ற படத்தில் எனது அனுமதியின்றி என் பெயரைப் பயன்படுத்தியுள்ளனர். இதில் எனது பெயரை தவறாக உபயோகப்படுத்தியுள்ளனர். எனவே இப்ப படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்," என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் ரஜினி
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன் படத்தை வரும் 25ம் தேதி வரை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார்.
மெயின் ஹூன் ரஜினிகாந்த் படத்தை ஃபைசல் சயீப் இயக்கியுள்ளார். தமிழில் வில்லன் வேடங்களில் நடித்து வந்த ஆதித்ய மேனன் இதில் நாயகனாகவும், கவிதா ராதேஷ்யாம் நாயகியாகவும் நடித்துள்ளனர். படத்தின் நாயகனுக்கு கில்லர் ரஜினிகாந்த் ராவ் என்ற பெயர். பொறுக்கித்தனம், கிறுக்குத்தனம் மிக்க சிபிஐ அதிகாரி வேடம் அவருக்கு. ரஜினியின் இமேஜைக் கெடுக்கும் அத்தனை விஷயங்களையும் படத்தில் காட்சிகளாக வைத்துள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications