சிக்ஸ் பேக் வைக்கும் தனுஷ் மகன்.. சீக்கிரமே ஹீரோவாகப் போகிறாராம் யாத்ரா.. ரஜினி பேரன் ரெடி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேரனும் நடிகர் தனுஷின் மகனுமான யாத்ரா கூடிய சீக்கிரமே சினிமாவில் ஹீரோவாக நடிக்கப் போவதாக ஜி.வி. பிரகாஷ் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஓபனாகவே பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்தார். அவருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். மகன்கள் இருவருமே நன்கு வளர்ந்து விட்ட நிலையில், சில ஆண்டுகள் முன்னதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்து பிரிந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Rajinikanth Grandson and Dhanush s Son Yatra will soon turned to be Hero

அம்மா - அப்பா பிரிந்தாலும் தொடர்ந்து யாத்ரா மற்றும் லிங்கா இருவருமே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் நல்ல பாண்டிங்கில் தான் உள்ளனர். அப்பாவின் பட விழாக்களுக்கும், படங்கள் வெளியானால் முதல் ஷோ பார்ப்பது என வலம் வருகின்றனர்.

சினிமாவில் களமிறங்கும் வாரிசுகள்: விஜய்யின் மகன் ஜேசன் இயக்குநராக சினிமாவில் களமிறங்கி சிக்மா படத்தை இயக்கி வருகிறார். சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஏற்கனவே ஹீரோவாகி பைசன் மூலம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியையும் கொடுத்து விட்டார். நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் யூத் படத்தை இயக்கி ஹீரோவாக நடித்து 70 கோடிக்கும் மேல் வசூல் செய்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளார். தனது அக்கா மகன் பவிஷை அறிமுகப்படுத்திய தனுஷ் அடுத்ததாக தனது மகன் யாத்ராவையும் சினிமாவில் களமிறக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிக்ஸ் பேக் வைக்கும் யாத்ரா: சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிகர் தனுஷ் மகன் யாத்ரா சிக்ஸ் பேக் வைத்து வருகிறார் என்றும் கூடிய சீக்கிரமே ஹீரோவாக களமிறங்கப்போகிறார் என்றும் கூறியுள்ளார். பவிஷ் ஹீரோவாக அறிமுகமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பொல்லாதவன் படத்தில் தனுஷ் சிக்ஸ்பேக் வைத்து நடித்தது போல யாத்ரா தரமாக ரெடியாகி வரப்போகிறார் என தெரிகிறது.

தனுஷ் சம்பளம் 70 கோடி: தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் வரும் ஏப்ரல் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. கர படத்தைத் தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலாவுடன் நடித்து வருகிறார். மேலும், க்ரித்தி சனோன் உடன் இணைந்து இன்னொரு பாலிவுட் படத்திலும் அவர் நடிக்கப் போகிறார் என்றும் அந்த படத்துக்கு அவருடைய சம்பளம் மட்டும் 70 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X