சொல்லி அடிச்சுருக்காரு சிவா... அண்ணாத்த இயக்குநரை உச்சி முகர்ந்த சூப்பர்ஸ்டார்!
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது அண்ணாத்த படம்.
படத்தை அனைவரும் விரும்பும் வகையில் சூப்பர்ஸ்டாருக்கு ஏற்றாற்போல இயக்கியுள்ளார் சிறுத்தை சிவா.
இந்நிலையில் சிவாவின் இயக்கம் குறித்து சூப்பர்ஸ்டார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதிபாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள படம் அண்ணாத்த. தீபாவளியையொட்டி வெளியான இந்தப் படம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

அரங்கு நிறைந்த காட்சிகள்
10 நாட்களை கடந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் ஓடி வருகிறது அண்ணாத்த. இந்தப் படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். குறிப்பாக படத்தின் கதைக்களமாக உள்ள அண்ணன் -தங்கை பாசததை பெண் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சொல்லி அடித்த இயக்குநர்
படத்தில் பஞ்ச் டயலாக்குகள், பாசப் போராட்டம், குஷ்பூ -மீனா என்ட்ரி, நயன்தாரா -கீர்த்தி சுரேஷ் நடிப்பு என அனைத்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் இயக்குநர் சிவா சொல்லி அடித்துள்ளதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஹுட் ஆப்பில் ரஜினி பேச்சு
ஹுட் ஆப்பில் பேசியுள்ள ரஜினி, சிவா இயக்கத்தில் வெளியான அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கிளைமாக்ஸில் தன்னை அறியாமல் கைத்தட்டியதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை பார்த்தபின்பே சிவாவிடம் தனது படத்தின் இயக்கம் குறித்து பேசியதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

கண்கலங்கிய ரஜினி
அண்ணாத்த படத்தில் வில்லேஜ் கேரக்டர், நல்ல கதை இரண்டும் இருந்தால் போதும் என்று சிவா சொன்னதாகவும் அவர் படத்தின் கிளைமேக்ஸை விவரித்தபோது தன்னுடைய கண்கள் கலங்கியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதேபோல படத்தை எடுக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டதாகவும் சூப்பர்ஸ்டார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

ரூ. 200 கோடி வசூல்
இதற்கு பதிலளித்த சிவா, அண்ணாத்த படம் ரிலீசானதும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் படத்தை பார்ப்பார்கள் என்று தெரிவித்ததாகவும், அதே போல சொல்லி அடித்துள்ளதாகவும் சூப்பர்ஸ்டார் மேலும் கூறியுள்ளார். அண்ணாத்த படம் வெளியான சில நாட்களில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











