ஹேட்டர்களுக்கு #Petta படத்தில் பதில் அளித்த ரஜினி
Recommended Video

சென்னை: பேட்ட படத்திலேயே ரஜினி தனது அரசியலை ஆரம்பித்துவிட்டார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது.
ரஜினி ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துள்ளது.

கட்சி
ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்கப் போகிறேன் என்று அறிவித்து ஓராண்டு ஆகியும் ஒன்னும் நடக்கவில்லை. அவர் கட்சி துவங்குவதற்கு முன்பே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழர்களை ஆள தமிழன் இல்லையா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியா டுடே கருத்துகணிப்பிலும் ரஜினியின் மவுசு குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்ச்
பேட்ட படத்தில் ரஜினிகாந்த் அரசியல் பற்றி பன்ச் வசனம் பேசியுள்ளார். தனக்கு நிஜத்தில் இருக்கும் எதிர்ப்புக்கு திரையில் வசனம் பேசியிருக்கிறார் ரஜினி. அவர் படத்தில் மட்டுமே முதல்வர் ஆக முடியும் என்ற விமர்சனம் எழுந்துள்ள நிலையில் நிஜத்தில் அல்லாமல் படத்தில் பதில் கொடுத்துள்ளார்.

ரஜினி
பேட்ட படத்தில் ரஜினி ஹாஸ்டல் வார்டனாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஹாஸ்டலுக்கு வரும் ஜூனியர்களை சீனியர்கள் ராகிங் செய்யும்போது ரஜினி, புதுசா வருகிறவங்களை எதிர்க்கும் அரசியல் இங்கிருந்து தானே ஆரம்பிக்கிறது என்கிறார்.

வடிவேலு
படத்தில் ரஜினி ஸ்டைலான, மாஸான வார்டனாக உள்ளார் என்பதை மறுப்பதற்கு இல்லை. இருப்பினும் வார்டன் என்றால் அது வடிவேலு தான் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள். வார்டன் விஷயத்தில் ரசிகர்கள் வடிவேலுவுடன் ஃபிக்ஸ் ஆகிவிட்டனர். அதனால் தான் இப்படி கூறுகிறார்கள். மற்றபடி ரஜினியை குறைகூறுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications











