கையில் வீச்சருவா... கொல்கத்தாவில் கொலைவெறியுடன் சுற்றும் நம்ம அண்ணாத்த!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ளது அண்ணாத்த படம்.

சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா நடித்திருக்கின்றனர்.

பக்கா கமர்சியல் திரைப்படமாக உருவாகியுள்ள அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி இணையதளத்தை தெறிக்க விடும் நிலையில் இப்படத்தைப் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகிக் கொண்டே உள்ளது.

அண்ணாத்த

அண்ணாத்த

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்துவரும் நிலையில் இப்பொழுது சிறுத்தை சிவாவுடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த போதே படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இரண்டு கதாநாயகிகள்

இரண்டு கதாநாயகிகள்

கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்தது. ஹைதராபாத்தில் எடுக்க இருந்த சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது பின் கொல்கத்தாவிலும் சில காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். குஷ்பு மற்றும் மீனா முக்கிய வேடங்களில் தோன்ற உள்ளனர்.

பாக்ஸ் ஆபீஸில் தரமான செய்கை

பாக்ஸ் ஆபீஸில் தரமான செய்கை

சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் கடைசியாக வெளியான விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீஸில் தரமான செய்கையை செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் வழக்கமான கமர்ஷியல் பாணியில் பக்கா வில்லேஜ் கதை களத்தில் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

ரத்தம் கொதிக்கக் கொதிக்க

ரத்தம் கொதிக்கக் கொதிக்க

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியானது. சும்மா கலர்ஃபுல்லாக மாஸாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து படக்குழு மோஷன் போஸ்டரையும் வெளியிட்டது. அதில் ரத்தம் கொதிக்கக் கொதிக்க கையில் வீச்சரிவாளுடன் புல்லட் பைக்கில் கொல்கத்தாவில் கொலைவெறியுடன் வில்லன்களை வேட்டையாட துடிக்கும் ரஜினியின் ஆக்ரோஷத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு உறுதிபடுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X