»   »  'ஐ ஆம் வெயிட்டிங்': ஒரு நடிகரின் பட ரிலீஸுக்காக காத்திருக்கும் ரஜினி

'ஐ ஆம் வெயிட்டிங்': ஒரு நடிகரின் பட ரிலீஸுக்காக காத்திருக்கும் ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரித்திக் ரோஷனின் காபில் படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ராகேஷ் ரோஷன் தயாரித்து நடித்த பகவான் தாதா இந்தி படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். அந்த படத்தில் ரஜினியின் வளர்ப்பு மகனாக ராகேஷ் ரோஷனின் மகன் ரித்திக் ரோஷன் நடித்திருந்தார்.

தற்போது ரித்திக் பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார்.

காபில்

காபில்

ரித்திக் ரோஷன் சஞ்சய் குப்தாவின் இயக்கத்தில் காபில் என்ற படத்தில் நடித்துள்ளார். அதில் அவரும், ஹீரோயின் யாமி கவுதமும் பார்வையில்லாத காதல் ஜோடியாக நடித்துள்ளனர். படம் விரைவில் வெளியாக உள்ளது.

ரஜினி

ரஜினி

ராகேஷ் ரோஷனும், ரஜினிகாந்தும் பல ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளனர். இந்நிலையில் ராகேஷ் கடந்த 12ம் தேதி போன் செய்து ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெயிட்டிங்

வெயிட்டிங்

காபில் படத்தின் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ட்ரெய்லர்களை பார்த்தேன். அருமையாக உள்ளது. ஹிர்த்திக்கின் நடிப்பு பிரமாதம். படத்தை பார்க்க நான் ஆவலாக இருப்பதாக அவரிடம் கூறுங்கள் என்று ரஜினி ராகேஷ் ரோஷனிடம் கூறியுள்ளார்.

இசை

இசை

ராகேஷ் ரோஷன் தயாரித்துள்ள காபில் படத்திற்கு ரித்திக்கின் சித்தப்பா ராஜேஷ் ரோஷன் தான் இசையமைத்துள்ளார். டைட்டில் பாடலான காபில் ஹுன் மற்றும் குத்துப்பாடலான ஹசீனோ கா தீவானா ஆகியவற்றின் இசை சூப்பர் என ரஜினி பாராட்டியுள்ளார்.

English summary
Super star Rajinikanth is waiting for the release of Hrithik Roshan's Kaabil in which he acts as visually challenged.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil