ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படம்.. போடு வெடிய.. டேக் ஆஃப் ஆகுறதுக்கு ரெடி ஆகிட்டாங்க ப்பா

சென்னை: கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டு ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் இருக்கும் ரஜினி; அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதனையடுத்து கமலுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வராவிட்டாலும்; படம் உறுதிதான் என்றும்; அதனை நெல்சன் திலீப்குமார் இயக்குவது கன்ஃபார்ம்தான் எனவும் சொல்கிறார்கள்.

இந்திய சினிமாவின் அடையாளங்களாக ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இருக்கிறார்கள். இரண்டு பேரும் தங்களது கரியரின் ஆரம்பத்தில் பல படங்களில் சேர்ந்து நடித்தார்கள். ஆனால் இப்படியே சேர்ந்து நடித்துக்கொண்டிருந்தால் இருவருமே உயரத்துக்கு செல்ல முடியாது என முடிவெடுத்து பிரிந்துவிட்டார்கள். கிட்டத்தட்ட 40 வருடங்களாக அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. அவர்களை சேர்த்து நடிக்க வைப்பதற்கான முயற்சிகளையும் யாரும் மேற்கொள்ளவில்லை என தெரிகிறது.

மீண்டும் நடக்குமா?: இப்போது இரண்டு பேருமே தங்களது கரியரின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்கள். எனவே அவர்களை எப்படியாவது சேர்த்து நடிக்க வைத்துவிடுங்கள் என படைப்பாளிகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்துவந்தார்கள். நிலைமை இப்படி இருக்க அவர்கள் இருவரும் இணைவார்கள் என அறிவிப்பு வந்தது. ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட்டாக கமல்ஹாசன் தயாரிக்க மட்டும்தான் செய்வார்; ரஜினிகாந்த்தான் ஹீரோவாக நடிப்பார் என சொன்னார்கள்.

Rajinikanth Kamal Haasan Reunion After 40 Years Promo Shoot Buzz Creates Huge Excitement
Photo Credit:

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி: இது ரசிகர்களிடையே கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தது. அதேசமயம் இதாவது நடக்கிறதே எனவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். முதலில் அப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். ஆனால் அவர் வெளியேறியதைத் தொடர்ந்து இளம் இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்குநராக உள்ளே வந்திருக்கிறார். விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது. கண்டிப்பாக அனைவருக்கும் இப்படம் திருப்தியை தரும் என சத்தியம் செய்திருக்கிறார் இயக்குநர்.

ரஜினி, கமல் நடிக்கும் படம்: என்னதான கமல் தயாரிப்பில் ரஜினி நடித்தாலும்; இரண்டு பேரும் சேர்ந்து நடித்தால்தான் அது மாஸ் என அனைவருமே கருதுகிறார்கள். இப்படிப்பட்ட நிலைமையில்தான் ஒரு தகவல் வந்தது. அதாவது ரஜினியும், கமலும் இணைந்து நடிப்பது உறுதிதான் என்பது அது. ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவும் இப்படம் குறித்து சில நாட்களுக்கு முன்பு பேசியிருந்தார். எனவே 40 வருடங்களுக்கு பிறகு ரஜினி - கமல் இணைவது உறுதியாகிவிட்டதாகவே கருதப்படுகிறது.

இன்று ப்ரோமோ ஷூட்: படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவார் என்றும்; விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் திரைத்துறையினர். இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ரஜினி - கமல் இணையும் படத்தின் ப்ரோமோ ஷூட்டிங் இன்று சென்னையில் நடக்கிறதாம். படக்குழுவில் முக்கியமானவர்கள் மட்டுமே இந்த ஷூட்டிங்கில் பங்கேற்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது. விரைவில் இந்த ப்ரோமோவை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X