ரஜினி - கமல் நடிக்கும் படம்.. இன்று வருகிறதா அறிவிப்பு?.. ரெட் ஜெயன்ட் மூவிஸ் செய்த சம்பவம்

சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து கமல்ஹாசன் படம் தயாரிக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். அப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்போதே அப்படம் பெற்றுவிட்டது. இந்நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இன்று மாலை அந்தப் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடப்போவதாக தெரிகிறது.

கூலி படத்துக்கு பிறகு ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினி. அப்படம் இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்துக்கு பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் தனது 173ஆவது படத்தில் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. அடுத்த வருடம் படம் ரிலீஸாகவுள்ளது. நிச்சயம் இந்தப் படம் எல்லோரையும் கவரும் வகையில் இருக்கும் என சிபி சக்கரவர்த்தி உறுதி கொடுத்திருக்கிறார்.

ரஜினியும், கமலும் சேர்ந்து நடிக்கும் படம்: இதற்கிடையே ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்து கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஓடிவிட்டன. தற்போது இரண்டு பேருமே தங்களது கரியரின் அந்திம காலத்தில் இருக்கிறார்கள். எனவே அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடித்துவிடமாட்டார்களா என ரசிகர்கள் ரொம்பவே ஆவலோடு காத்திருக்கிறார்கள். அந்த ஆவலை தீர்க்கும் விதமாக சூப்பர் ஸ்டாரும், விண்வெளி நாயகனும் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பார்கள் என கூறப்பட்டது.

Rajinikanth Kamal Haasan Reunion After 40 Years Red Giant Movies Big Announcement Today
Photo Credit:

நெல்சன் திலீப்குமார் இயக்குநர்?: இருவரும் நடிக்கும் படத்தை முதலில் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்தார். ஆனால் அவர்களோ தங்களுக்கு ஆக்‌ஷன் கதையைவிடவும், லைட் ஹார்ட்டடாக; காமெடி எல்லாம் இருக்கும்படியான ஒரு கதை வேண்டுமென முடிவு செய்தார்கள். அதற்கு சரியான ஆள் நெல்சன் திலீப்குமார்தான் என தீர்மானித்து அவருக்கு படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துவிட்டார்கள் என தெரிகிறது. ஏற்கனவே கமலை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை நெல்சன் இயக்கியிருந்தது நினைவுகூரத்தக்கது.

ப்ரோமோ ஷூட்: சமீபத்தில் அந்தப் படத்தின் ப்ரோமோ ஷூட் நடந்ததாகவும்; அதில் இரண்டு பேரும் 80ஸ் கெட்டப்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் க்ளீன் ஷேவ் செய்து புது லுக்கில் இருந்தார். அதை பார்த்த ரசிகர்களோ, கண்டிப்பாக இது கமலுடன் சேர்ந்து நடிக்கும் படத்துக்கான லுக்தான் என அடித்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். நீண்ட வருடங்கள் கழித்து இருவரும் சேர்ந்து நடிப்பதால் பெரிய எதிர்பார்ப்பு இப்போதே படத்தின் மீது எழுந்திருக்கிறது. நிச்சயம் வசூலில் சக்கைப்போடு போட்டு பெரிய ரெக்கார்டை படைக்கும் எனவும் நம்பப்படுகிறது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பு: மேலும் இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி அந்த நிறுவனத்தை கையில் எடுத்திருக்கிறார். எனவே அவர் தயாரிக்கும் முதல் படமே ஐகானிக் படமாக மாறுகிறது. இந்நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "உலகங்கள் ஒன்றிணையும்போது ஒரு பக்கம் சாய்வதேது?" என பதிவிட்டிருக்கிறது. மேலும் இன்று மாலை 7.12 மணிக்கு அறிவிப்பு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளது. கண்டிப்பாக இது ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பாகத்தான் இருக்கும் என கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X