twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொள்ளாச்சி பயங்கரம்: இதுக்கு தான் ரஜினி சார் உங்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்தணும்

    By Siva
    |

    Recommended Video

    பொள்ளாச்சி விவகாரம்: மனம் குமுறும் சினிமா பிரபலங்கள்.. ரஜினி மட்டும் பேசவில்லையே ஏன்?- வீடியோ

    சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் ரஜினிகாந்த் அமைதி காப்பது மக்களை வழக்கம் போன்று எரிச்சல் அடைய வைத்துள்ளது.

    பொள்ளாச்சியில் அப்பாவி பெண்கள் 200 பேரை 20 பேர் கொண்ட கும்பல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தது. இந்த கொடூரத்தை செய்த 20 பேரில் வெறும் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ளவர்களையும் உடனே கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தம்: காரணம் கமல் ஹாஸன் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தம்: காரணம் கமல் ஹாஸன்

    தேர்தல்

    தேர்தல்

    சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆசையுடன் இருக்கும் ரஜினிகாந்த் பொள்ளாச்சி விவகாரம் பற்றி கண்டும் காணாதது போன்று இருக்கிறார். பெயருக்கு ஒரு கண்டன ட்வீட் கூட போடவில்லை. இத்தனைக்கும் திரையுலகினர் பலரும் அந்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.

    பா. ரஞ்சித்

    பா. ரஞ்சித்

    ரஜினியை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் எல்லாம் பொள்ளாச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரசியலுக்கு வரப் போகும் ரஜினி அமைதியாக உள்ளார்.

    மக்கள்

    மக்கள்

    ரஜினியின் இந்த மவுனம் மக்களுக்கு கடுப்பை ஏற்படுத்தினாலும் ஆச்சரியம் அளிக்கவில்லை. அவரிடம் போய் என்னத்த கேட்க, நான் இன்னும் கட்சி துவங்கவில்லை என்று சொன்னாலும் சொல்வார் என்று பேசத் துவங்கிவிட்டனர்.

    மக்கள் நீதி மய்யம்

    மக்கள் நீதி மய்யம்

    கமல் ஹாஸன் பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்ததுடன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கண்டன பேரணி நடத்தினார். கமல் கட்சியினர் துணிந்து பேரணி நடத்தியது மக்களை கவர்ந்துள்ளது. ரஜினி இனிமேல் கண்டனம் தெரிவித்தால் என்ன, தெரிவிக்காவிட்டால் என்ன என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

    English summary
    Rajinikanth has dissappointed the peple of Tamil Nadu again by staying away from Pollachi sexual assault case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X