மெடிக்கல் செக்கப்புக்கு போகணும்: சர்வதேச திரைப்பட விழாவை ரஜினி துவங்கி வைப்பது சந்தேகம்
பனாஜி: கோவாவில் நடக்கும் 44வது இந்திய சர்வதே திரைப்பட விழாவை ரஜினிகாந்த் துவங்கி வைப்பது சந்தேகமே என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி கோவாவில் துவங்குகிறது. இந்த விழாவை துவங்கி வைக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவர் விழாவில் கலந்து கொண்டால் அது பெரிய கௌரவம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைக்கின்றனர். இந்நிலையில் ரஜினி கலந்து கொள்வது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.

இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், என்டர்டெய்ன்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவாவின் துணை தலைவருமான விஷ்ணு வாக் கூறுகையில்,
இந்திய சர்வதேச திரைப்பட விழாவை துவங்கி வைக்குமாறு ரஜினிகாந்தை அழைத்துள்ளோம். ஆனால் அவர் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டி இருப்பதால் விழாவில் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











