புத்தாண்டில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த்
புத்தாண்டு தினத்தில் தனது வீட்டு முன் கூடிய ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.
புத்தாண்டு தினம், பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ நாட்களில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு முன் ரசிகர்கள் திரண்டு வந்துவிடுகின்றனர். இந்த நாட்களில் பெரும்பாலும் ரஜினி தன் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துவார்.

இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம். இன்றும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ரஜினியைச் சந்திக்க அவர் வீட்டு முன் குவிந்தனர்.
அவர்களை ரசிகர் மன்றப் பொறுப்பாளர் சுதாகர் ஒழுங்குபடுத்தி நிறுத்த, சில நிமிடங்களில் வீட்டிலிருந்து வெளியில் வந்தார் ரஜினி. அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமாக வாழ்த்துக்களைக் கூற, ரஜினியும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
கைககளைக் கூப்பியபடி ரஜினி சில நிமிடங்கள் நின்றார். பின்னர் வீட்டுக்குள் சென்றார்.


Click it and Unblock the Notifications











