Rajini - அய்யய்யோ அந்த ஹீரோயினுடன் டூயட் எல்லாம் வேதனை.. மனம் திறந்த ரஜினி.. ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்திலிருந்து கலர்ஃபுல்லான போஸ்டர் ஒன்று வெளியானது. வேட்டையன் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இந்த சூழலில் ரஜினிகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் தலைவர் ஓபனா போட்டு உடைச்சிட்டாரே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
ரஜினிகாந்த்தை ரசிக்காதவர்கள் இந்தியாவில் யாருமே இல்லை. இதுவரை 169 படங்களில் நடித்திருக்கும் அவர் தனக்கென்று தனி ஸ்டைல், டயலாக் டெலிவிரி, நடை, உடை, பாவனை என புதிதாக உருவாக்கிக்கொண்டு இந்திய சினிமாவை ரூல் செய்துவருகிறார். இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகாவும் விளங்குகிறார் ரஜினிகாந்த். சிறுவர் முதல் பெரியவர் வரை; சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள் வரை அனைவரிடமும் ரஜினிகாந்த்தின் தாக்கம் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதே எதார்த்தம்.

ஜெயிலர்: அப்படிப்பட்ட ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாகவே ஒரு ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்தார். தர்பார், அண்ணாத்த படங்கள் சறுக்கலை ஏற்படுத்தியதால் அவரது சூப்பர் ஸ்டார் நாற்காலி ஆட்டம் கண்டுவிட்டதாக குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன. இந்த சூழலில்தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார். படம் மெகா ஹிட்டானது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்பட்டது. ஜெயிலரின் வெற்றி ரஜினிக்கு ரொம்பவே உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
வேட்டையன்: ஜெயிலர் வெற்றிக்கு பிறகு வேட்டையன் படத்தில் நடித்துவருகிறர் ரஜினிகாந்த். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கும் அவர் அதனை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் அல்லது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படி பிஸியாக இருக்கும் ரஜினியின் மீது சில வருடங்கள் முன்னர்வரை கடுமையான விமர்சனம் ஒன்று முன்வைக்கப்பட்டு வந்தது.
என்ன விமர்சனம்?: அதாவது ரஜினிக்கு வயதானாலும் தன்னுடைய மகள் வயது ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்கிறார்; டூயட் பாடுகிறார்; அதையெல்லாம் பார்க்க ஒரு மாதிரி இருக்கிறது. ஹிந்தியில் எப்படி அமிதாப் பச்சன் வயதான பிறகு அந்த வயதுக்கு தகுந்த ரோல்களை செய்கிறாரோ அதேபோல்தான் ரஜினியும் செய்ய வேண்டும் என்று ஓபனாகவே பேசினார்கள். குறிப்பாக சிவாஜி படத்தில் ஸ்ரேயா, லிங்கா படத்தில் சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா என அவர் டூயட் பாடியதை வைத்து கிண்டலும் செய்தனர்.
ரஜினி ஓபன் டாக்: அந்த சமயத்தில் ரஜினிகாந்த்தே அதுகுறித்து பேசியிருக்கும் வீடியோ இப்போது ட்ரெண்டாகியுள்ளது. லிங்கா பட விழாவில் பேசிய அவர், "லிங்காவில் சோனாக்ஷி சின்ஹாவுடன் ரொமான்ஸ் செய்வது எனக்கு ரொம்பவே சவாலானதாக இருந்தது. முதன்முறை நான் கேமரா முன் நின்றபோதுகூட அந்த அளவுக்கு நான் பதற்றப்படவில்லை. என்னை போல 60 வயது நடிகருக்கு கடவுள் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை என்னவென்றால் அது டூயட் பாடுவதுதான். ஓடும் ரயிலில் சண்டை செய்வதை விட சோனாக்ஷியுடன் டூயட் பாடுவது எனக்கு ரொம்பவே வேதனையாக இருந்தது.
மகள்களுடன் விளையாடியவர்: என்னுடைய முதல் படமான அபூர்வ ராகங்கள் பட ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்யும்போதுகூட நான் அவ்வளவு டென்ஷனாக இல்லை. சோனாக்ஷியை நான் ஒரு குழந்தையைப்போல்தான் பார்த்திருக்கிறேன். என்னுடைய மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யாவுடன் ஒன்றாக விளையாடி வளர்ந்தவர் அவர். அதேபோல் தான் அனுஷ்காவுடன் டூயட் பாடும்போதும் உணர்ந்தேன்"" என்றார். இள வயது ஹீரோயின்களுடன் டூயட் பாட ரஜினிக்கு விருப்பம் இல்லை இயக்குநர்கள்தான் அவ்வாறு சீன்களை வைத்தார்கள் என்பதை இப்பவாது புரிஞ்சுக்கங்க என ரஜினி ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











