பல மருத்துவமனைகளை பார்த்த உடம்பு இது.. என்ன ரஜினி இப்படி சொல்லிட்டாரு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட்டானதால் அதே வைபை வரவிருக்கும் படங்களிலும் தக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் காவேரி மருத்துவமனை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் அவர்.

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து கடைசியாக ஜெயிலர் படமும், கெஸ்ட் ரோலில் நடித்து லால் சலாம் படங்களும் வெளியாகின. இவற்றில் ஜெயிலர் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த அந்தப் படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால் கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு காரணம் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதுதான் என்று இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியது ட்ரோலுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

வேட்டையன்: ரஜினி இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தச் சூழலில் சென்னையில் காவேரி மருத்துவமனை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் பேச்சு: நிகழ்ச்சியில் பேசிய அவர், "பொதுவாக நான் எந்த நிகழ்ச்சிக்கும் செல்வது இல்லை. ஏனென்றால் நான் ஒரு கல்லூரி கட்டடத்தை திறந்துவைத்தால் அதில் ரஜினிக்கு ஷேர் இருக்கும், பினாமி பெயரில் வைத்திருக்கிறார், அவர் பார்ட்னராக இருக்கிறார் என்று சொல்லிவிடுகிறார்கள். அதனால்தான் ரொம்ப நாளாகவே நான் எந்த நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை. எனக்கு முன்னாள் பேசியவர், ரஜினிக்கு மருத்துவர்கள், மருத்துவமனை பற்றி நன்கு தெரியும் என்று சொன்னார்.

Rajinikanth Open Talks about His Health Issue

பல மருத்துவமனைகளை பார்த்த உடம்பு: அவர் சொன்னது நூறு சதவீதம் உண்மை. என்னுடைய உடம்பு இசபெல்லா, விஜயா, காவேரி, அப்போலோ, ராமச்சந்திரா, சிங்கப்பூர் எலிசபெத், அமெரிக்காவில் இருக்கும் மருத்துவமனைவரை சென்றிருக்கிறது. அதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை எப்போதுமே இருக்கிறது. அவர்களுடைய உதவியாலும், மருத்துவத்துறையின் கண்டுபிடிப்புகளாலும்தான் நான் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்.

இரண்டு பிரிவுகள்: மருத்துவமனைக்கு வந்து செல்பவர்கள் நோயாளிகள், பார்வையாளர்கள் என இரண்டு தரப்பினர் இருக்கிறார்கள். அந்தவகையில் நான் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான முறையில் அனுமதிக்கப்பட்டேன். என்னுடைய மனைவி மருத்துவரிடம் பேசியதும் அவர்களே வீட்டுக்கு வந்து பரிசோதனை செய்து உடனடியாக ஆம்புலன்ஸுக்கு அழைத்து சென்றார்கள். அடுத்த சில மணி நேரங்களில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.

ஒரு சதவீதம் கஷ்டம்: ஆபரேஷன் செய்யும் முன்பு 99 சதவீதம் கியாரண்ட்டி தருகிறோம் என்று சொன்னார்கள். எனக்கு அந்த ஒரு சதவீதம்தான் எனது எண்ணங்களில் ஓடிக்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. பிறகு ஆபரேஷன் சக்சஸ் என சொன்னார்கள். அதன் பிறகு நான் 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். அங்கிருந்த மருத்துவர்கள், பணியாளர்கள் முகத்தில் ஒருவித பாசிட்டிவிட்டி ஓடுவதை பார்த்தேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X