யார் ஹீரோ? யார் வில்லன்?.. நெல்சன் கழுத்தை பிடித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. என்ன நடக்கப்போகுதோ?

சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கும் KH X RK படத்தின் ப்ரோமோ இன்று வெளியாகியிருக்கிறது. செம மாஸாகவும், கூலாகவும் உருவாகியிருக்கும் வீடியோ இரண்டு பேரின் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் யார் ஹீரோவாக நடிப்பார், யார் வில்லனாக நடிப்பார் என்ற கேள்வியும் சோஷியல் மீடியாவில் அதிகளவில் எழ ஆரம்பித்துவிட்டது.

ரஜினியை வைத்து படம் தயாரிக்கப்போவதாக கமல் அறிவித்தவுடன்; அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து எப்போது நடிப்பார்கள் என அத்தனை பேரும் கேட்க தொடங்கினார்கள். அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாக இரண்டு பேரும் நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் இன்பன் உதயநிதி படத்தை தயாரிக்கிறார். இதுதான் அவர் தயாரிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth or Kamal Haasan Who Will Play Hero and Villain in KH X RK Fans Debate After Promo out
Photo Credit:

KH X RK ப்ரோமோ: படம் பற்றிய அறிவிப்பு வந்ததை அடுத்து படத்தின் ப்ரோமோ ஷூட் செய்யப்பட்டது. அந்த ப்ரோமோ இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ரிலீஸும் செய்யப்பட்டுவிட்டது. அந்த ப்ரோமோவில் இரண்டு பேரும் படு ஸ்டைலாக இருக்கிறார்கள். வழக்கம்போல் ப்ரோமோவில் ஹியூமரையும் நெல்சன் தூவியிருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இல்லாமல் லைட் ஹார்ட்டட் படமாக இது இருக்கும் என்பதை இந்த வீடியோ உறுதி செய்திருக்கிறது.

ரசிகர்களிடம் எழுந்திருக்கும் கேள்வி?: இந்த ப்ரோமோவில் கமல்ஹாசன் யார் ஹீரோ என கேட்கும் கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இரண்டு பேரும் நாற்பது வருடங்களுக்கு பிறகு சேர்ந்து நடிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இருவருக்குமே சமமான முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டிய கட்டாயம் நெல்சனுக்கு இருக்கிறது. ப்ரோமோவில் அது கைகூடி வந்தாலும் முழு படத்திலும் அது நடக்க வேண்டும். அப்படி தவறும்பட்சத்தில் நிச்சயம் பெரிய சங்கடத்தை இயக்குநர் சந்திக்கும் நிலைமை உருவாகும் என்பது எதார்த்தம்.

ரசிகர்களுடைய விருப்பம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்தான் வில்லனாக நடிக்க வேண்டும் என்பது பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இதற்கு முன்னதாக அவர் பல படங்களில் வில்லனாக அசத்தியிருக்கிறார். அதெல்லாம் ஏகோபோக ரெஸ்பான்ஸை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகத்தான் அவர் வில்லனாக வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதேசமயம் கமல்ஹாசன் கல்கி, ஆளவந்தான் படங்களை தவிர்த்து வில்லனாக நடிக்கவில்லை. எனவே அவரை வில்லனாக நடிக்க வைப்பதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதப்படுகிறது.

என்ன செய்யப்போகிறார் நெல்சன்?: அதேசமயம் ஒருவரை ஹீரோவாக வைத்து ஒருவரை வில்லனாக போட்டால் சில சிக்கல்கள் வரவும் வாய்ப்பு இருப்பதால்; இரண்டு பேரையும் ஹீரோவாக வைத்து; கதையில் நடக்கும் சூழலால் பிரிந்து அவர்கள் மோதிக்கொள்வது போல் காட்சிகள் அமைத்தால் பேலன்ஸாக செல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. இப்படி நெல்சனின் கழுத்தை நெரிக்கும் விதமாக ஏகப்பட்ட விஷயங்கள் KH X RK படத்தில் இருக்கின்றன. அதையெல்லாம் சமாளித்துவிடுவாரா இயக்குநர். பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X